மேலும் அறிய
Advertisement
Jangiri Sweet: தித்திப்பான ஜாங்கிரி செய்றது இவ்வளவு ஈசியா..? இப்படித்தான் செய்யனும்..!
ஜாங்கிரி செய்யுறது எவ்ளோ ஈசினு தெரிஞ்சா இனி நீங்க வீட்டிலேயே ஜாங்கிரி செய்வீங்க. சுலபமாக எப்படி ஜாங்கிரி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 3 கப்
1 தேக்கரண்டி அரிசி மாவு
புட் கலர் - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.
உளுத்தம்பருப்பை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்து, இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை ஒரு கையளவு உருண்டையாக முடிந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து தீயை மிதமான தீயில் வைத்து எண்ணெயை சூடு படுத்த வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடானதும், முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, கடாயில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாக மாவை பிழிய வேண்டும்.
அதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி ரெடி.
( சர்க்கரை பாகு தயார் செய்வதற்கு இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி நுரை நுரையாக பொங்கி வரும். அப்போது ஒரு டம்ளரில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு. கொதித்திக்கொண்டிருக்கும் சர்க்கரை பாகை ஒரு கரண்டியால் எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அந்த பாகு கரையாமல் முத்து போன்று தண்ணீருக்கு அடியில் சென்று நின்று விட்டால், பாகு பதம் வந்து விட்டது என்று அர்த்தம். ஒரு வேளை அந்த பாகு தண்ணீரில் கரைந்தால் பாகு பதம் வரவில்லை என்று அர்த்தம். மீண்டும் சிறிது நேரம் பாகு பதம் வரும் வரை கொதிக்க வைத்து பாகை தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். )
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion