ஸ்வீட்டும் சாப்பிடணும் அது ஆரோக்கியமாகவும் இருக்கனும்: அப்படினா இத சாப்பிடுங்க!
தினம் ஒரு நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஸ்வீட் சாப்பிட்டதும் மாதிரியும் ஆச்சு. உடலுக்கு நல்லதாகவும் ஆச்சு. இயற்கையிலே அதிக இனிப்பு சுவை கொண்டு ஒரு பழம். மற்ற பழங்களை விட இதற்கு தனி சிறப்பு உணவு
தினம் ஒரு நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஸ்வீட் சாப்பிட்டதும் மாதிரியும் ஆச்சு. உடலுக்கு நல்லதாகவும் ஆச்சு. இயற்கையிலே அதிக இனிப்பு சுவை கொண்டு ஒரு பழம். மற்ற பழங்களை விட இதற்கு தனி சிறப்பு உணவு. நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பாலை வனங்களில் மிகவும் குறைவாக தண்ணீர் இருந்தால் போதும். இது நன்றாக வளரும்.
சதை பற்றுடன் இருக்கும் இந்த பழத்தில் நார்சத்து, வைட்டமின் ஏ , இரும்பு சத்து , கார்போஹைட்ரெட் சத்துகள் நிறைந்து இருக்கிறது. இதை தினம் 4-5 பழங்கள் சாப்பிடலாம்.
யாரெல்லாம் இதை சாப்பிடலாம் ?
குழந்தைகள் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் , இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், அனைவரும் எடுத்து கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது ?
இயற்கையிலே அதிக இனிப்பு சுவையுடனும், கார்போஹைட்ரெட் நிறைந்து இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்.
பயன்கள்
- காலை வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் மற்றும் உலர்பழங்கள் சேர்த்து கொள்வது நல்லது
- இரும்பு சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் பேரீச்சம் பழம் தினம் எடுத்து கொள்ளலாம்.
- மாதவிடாய் ஆரம்பிக்கும் பருவ வயதில் இதை பெண் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது மாதவிடாய் பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வாக இருக்கும்..
- நார்சத்து நிறைந்து இருக்கிறது. மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினம் இதை எடுத்து கொள்வதால் மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இதை தினம் எடுத்து கொள்ளலாம்.
- தொற்று நோய்கள், ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இதை தினம் எடுத்து கொள்ளலாம்.
- இரவு தூங்குவதற்கு முன் பேரீச்சம் பழம், வெதுவெதுப்பான பால் சாப்பிடுவதால், மெலடோனின் எனும் தூக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
இதை எப்படி சாப்பிடுவது
பேரீச்சம் பழங்களை அப்டியே சாப்பிடலாம்.
பேரீச்சம் பழங்களை தேனில் ஊற வைத்து தினம் காலை மாலை இருவேளையும், ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம்.
பேரீச்சம் பழம் மற்றும் உலர் பழங்கள், நெய் சேர்த்து பேரீச்சம் பழ லட்டு செய்து ஸ்னாக்ஸ் ஆக சாப்பிலாம்.
வீட்டில் செய்யும் இனிப்புகளில், பேரிச்சம் பழத்தை சிறிதாக வெட்டி உலர் பழங்களுடன் சாப்பிடலாம்.