மேலும் அறிய

Holi 2025: ஹோலி கொண்டாட்டம் தொடங்கியது எப்போது? புராணக் கதைகள் சொல்வது என்ன?

Holi 2025: ஹோலி கொண்டாட்டம் பற்றி புராண கதைகளில் சொல்லப்பட்டிருப்பவை பற்றி காணலாம்.

இந்தியாவின் பண்டிகைளில் முக்கிய விழாக்களில் ஒன்று,  ஹோலிப்(Holi) பண்டிகை. இது கொண்டாடப்படுவதற்கான காரணம், முதலில் கொண்டாடப்பட்டது எப்போது ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்வோம். 

வண்ணங்களின் பண்டிகை -  ‘ஹோலி’.  நாடு முழுவதும் கொண்டப்படும் பிரசித்திபெற்ற பண்டிகைகளுள் ஒன்று. மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்த பண்டியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருப்பதும் உண்டு. அப்படி இருக்கையில், ஹோலி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தாண்டு மார்ச்,14-ம் தேதி ஹோலி கொண்டாடப்படுகிறது. 

ஹோலி பண்டிகை:

ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் ஒன்றாக தொடங்கியிருந்தாலும்,  மற்ற மாநிலங்களிலும் பல்வேறு கதைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படும் வழக்கம் அதிகரித்துவிட்டு. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வெறு பெயர்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. லத்மார் ஹோலி, உத்திரபிரதேசம், பகுவா ஹோலி-பீகார்,உக்ளி,கேரளா, ஷிக்மோ,கோவா ராயல் ஹோலி ஆகிய பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சில பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. இளவேனிற்காலத்தை வரவேற்கும் விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள மக்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்களை தூவி, மகிழ்ச்சியுடன் ஹோலி கொண்டாடுகின்றனர். ஒவ்வொன்றும் தனி வண்ணம் என்றாலும், எல்லா வண்ணங்களின் கலவை நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஹோலி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னமே மக்கள் வண்ண பொடிகளை தயாரிப்பதும், வாங்குவதும் என இருப்பார்கள். 

பெளர்ணமி

 மாசி மாத பௌர்ணமி தினத்தில் ஹோலி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தில் ஐந்து நாள் விழாவாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உறவுகளைக் கொண்டாடும் விழாவாகவும் இது பார்க்கப்படுகிறது.

கால மாற்றத்தில், ஹோலிப் பண்டிகை நாட்டில் உள்ள மற்ற இடங்களிலும் கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. மகிழ்ச்சியுடன் இருக்க காரணமெல்லாம் தேவையில்லை இல்லையா?  இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ஹோலிப் பண்டிகை  கோலாகலமாக கொண்டாடப்படும்.  ஹோலியன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்றுக் கூடி, வண்ணப் பொடிகள், நிறங்கள் கலந்த தண்ணீர்,  வண்ணங்களுடன் தண்ணீர் நிறைந்த பலூன்கள் ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசி மகிழ்வர். 

எல்லோர் மீதும் வண்ணங்களைத் தெளித்து ஹோலி தினம் கொண்டாடுவார்கள். சூரியக் கதிர்களால் ஏற்படும் வானவில்லில் இருக்கும் வண்ணங்களான  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்கள் அதிகம் இந்தக் கொண்டாட்டத்தில் பயன்படுகின்றன.  இனிப்புகள், உணவு என உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு புதிய நம்பிக்கைமிக்க நாட்களை வரவேற்கும் விதமாகவும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புராணக் கதைகள் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ஹோலிப் பண்டிகை வசந்தத்தை வரவேற்கும் ஒரு விழா என்றாலும் இதற்கு பின் புராணக் கதையும் சொல்லப்படுகிறது. பிரகலாதன். இந்தப் பெயரை திரைப்படத்தில் கேட்டிருக்கலாம். நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதன். இவரை கொலை செய்வதற்கு ஹிரண்யனின் தங்கை ஹோலிகா முயற்சி செய்திருக்கிறார்.  ஹோலிகாவை, கட்டியணைப்பவர் எவரும் தீயில் எரிந்து சாம்பல் ஆகிவிடுவார்கள். இந்த ஐடியைவை ஹோலிகா செயல்படுத்த, பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்கத் தீர்மானித்தாள்.

அப்போது, நாராயணனை நினைத்து இருந்த குழந்தை பிரகலாதன். அவன் தீயில் அழியும்போது அதை அவர் பார்த்துகொண்டிருக்க மாட்டார் அல்லவா. அப்படி, தீய எண்ணங்களுடன் பிரகலாதனை கட்டியணைத்த ஹோலி தீயில் பொசுங்கி போனார்.  தீய எண்ணங்களுடன் வாழ்ந்த ஹோலிகா மறைந்த தினமே,  மக்களால் ஹோலிப் பண்டிகையாக உருவானது  என்றும் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

 கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி என்றும் சொல்லப்படுகிறது. ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கொண்டாடிய மகிழ்ச்சியான திருவிழா ஹோலி.

ஹரிஹர் புராணத்தின்படி, சிவன் கைலாசத்தின் ஆழ்ந்த தியானத்தின் இருந்தாராம். அப்போது அவரை விழிக்க வைத்து தரகாசுரன் எனும் அசுரவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,. அப்போது காமதேவன், ரதி இருவரும் சிவனை விழிக்க வைக்க நடனம் ஆடியுள்ளனர். இதனால் கோபமடைந்த சிவன், காமதேவை பார்வையல் எரித்துவிட்டார். பிறகு, அசுரனை அழிக்க வேண்டியே இப்படி செய்ததாக ரதி தெரிவித்தார். அதை ஏற்று தரகாசுரனை அழித்தா சிவன். ரதி கோரிக்கையை ஏற்று காமதேவையும் மீண்டும் உயிர்பெற செய்தாராம். அதன்பிறகு, ரதி, காமதேவன் இருவரும் பெளணர்மியன்று உணவு உடன் கொண்ட்டாடத்தை ஏற்பாடு செய்தாரம். அதில் இருவரும் நடனம் ஆடியாதாவும் சொல்லப்படுகிறது. அன்றைய நாள் ஹோலி பண்டிகை. அன்று முதல் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. 

இன்னொரு கதையும் இருக்கிறது. பெளணர்மியன்று சிவன் ட்ரம்ஸ், விஷ்ணு புல்லாங்குழல் வாசித்தார்களாம். பார்வதி வீணை வாசிக்க சரஸ்வதி இளவேனிற்காலத்தை வரவேற்று பாடல்களை பாடியதாக சொல்லப்படுகிறது. இப்படி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளது.

உறவுகள், நண்பர்கள் என எந்த பேதங்களும் இல்லாமால் கொண்டாடும் இந்த ஹோலிப் பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு. புதிய நம்பிக்கையுடனும் வசந்தத்தை வரவேற்போம். எல்லையில்லா ஆனந்தத்தை இந்த இளவேனிற்காலம் நமக்கு வழங்கட்டும். ஹேப்பி ஹோலி!!!


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget