ஹோலி கொண்டாட்டம் - வண்ணப் பொடியை அகற்ற டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

வண்ணங்களின் பண்டிகை என்றழைகக்ப்படும் ‘ஹோலி பண்டிகை’ நாடு முழுவதும் கொண்டப்படும் பிரசித்திபெற்ற பண்டிகைகளுள் ஒன்று.

மார்ச்,14-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கையானதாக இருப்பது நல்லது.

உடலில் இருக்கும் வண்ணங்களை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து குளிக்கலாம்.

மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் குளிக்கலாம். அதில் சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து குளிக்கலாம்.

தயிர், தேன், கடலை மாவு ஆகியவற்றையும் பயன்படுத்தி குளிப்பது நிற பொடிகளை நீக்கவும் சருமத்தை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

துணிகளில் உள்ள வண்ணங்களை நீக்க, எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஊறவைத்து துவைக்கலாம்.

துணிகளில் உள்ள கறைகளை நீக்க வினிகர் பயன்படுத்தலாம்.

இனிய ஹோலி வாழ்த்துகள்..