Corn | இதெல்லாம் தெரிஞ்சா இனி சோளம் தான் உங்க பேவரைட்.. அசர வைக்கும் பயன்கள்!
மழைக்காலத்தில் அனைவரும் விரும்பி எடுத்து கொள்ளும் ஒரு உணவு சோளம். இதில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
மழைக்காலத்தில் அனைவரும் விரும்பி எடுத்து கொள்ளும் ஒரு உணவு சோளம். இதில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
இந்த மழைக்காலத்தில் வீட்டிற்குள் இருந்து சோளத்தை வேகவைத்து, அதில் வெண்ணெய் தடவி உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொறித்து கொண்டே இருப்பது அனைவரும் பிடித்தமான ஒன்று . இது சால்ட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பயன்கள் தெரிந்து கொண்டால் மழை காலம் மட்டுமில்லை, அனைத்து காலங்களிலும் சாப்பிடலாம். இது பல்வேறு வகைகளில் சமைத்து சாப்பிடலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகளும், அது உடலின் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் மேம்படுத்துகிறது என தெரிந்து கொள்ளலாம்.
- நார்சத்து - நார்சத்து நிறைந்த உணவு, இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். இதில் நீரில் கரைய கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- வைட்டமின் - இதில் வைட்டமின் பி சத்து நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. இதில் பொட்டாசியம் சத்து நிறைத்து இருக்கிறது. முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
3. ஆண்டிஆக்ஸிடெண்கள் நிறைந்த உணவு. இதில் உடலில் ஏதும் வீக்கம் வராமல் பாதுகாக்கும். இதில் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
4.இதில் கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆண்டிஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பதால், இது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
5.நார்சத்து நிறைந்து இருப்பதால் இதை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருப்பதாக தோன்றும். மேலும் இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க முயற்சித்து டயட்ல் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். அவர்கள் தினம் உணவில் இதை சேர்த்து கொள்வதால் உடல் எடையும் அதிகமானது. வயிறும் நிறைவாக இருக்கும்.
6.கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு - இதில் போலிக் ஆசிட் எனும் ஊட்டச்சத்து நிறைந்து இருப்பதால், பிரசவ காலத்தில் இந்த உணவை எடுத்து கொள்ளலாம். இது ஊட்டச்சத்து மிக்கதாகவும், நார்சத்து நிறைந்து இருப்பதாலும், அனைவரும் எடுத்து கொள்ளலாம்.
இந்த சோளத்தை வைத்து, நிறைய விதவிதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம். சோளத்தை வைத்து சூப் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
சோளத்தை முதலில் வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த பின்னர் பாதி சோளத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். மீதி பாதியை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். பின்னை அரைத்து வாய்த்த சோளத்தை அதில் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், அரைக்காமல் முழுமையாக இருந்த சோளம் அனைத்தையும் சேர்த்து பரிமாறலாம்.