Health Tips: ஒற்றைத் தலைவலியை போக்குமா ராப்ரி ஜிலேபி? ஆயுர்வேத நிபுணர் அட்வைஸ் இதுதான்..!
ஒற்றைத் தலைவலி என்பது தற்காலத்தில் பலருக்கு ஏற்படும் பாதிப்பாகக் கருதப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு குமட்டலுடன் கடுமையான தலைவலி தாக்குதல்கள் அடிக்கடி இருக்கும்.
ஒற்றைத் தலைவலி என்பது தற்காலத்தில் பலருக்கு ஏற்படும் பாதிப்பாகக் கருதப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு குமட்டலுடன் கடுமையான தலைவலி தாக்குதல்கள் அடிக்கடி இருக்கும். "உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவே. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் ஒற்றைத் தலைவலியை 'வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒற்றைத் தலைவலிக்கு பலரும் பல கைவைத்தியங்கள் சொல்வார்கள். இன்னும் சில நிபுணர்கள் சில லைஃப்ஸ்டைல் ஆலோசனைகளை சொல்வார்கள். அத்தகைய ஆலோசனை சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
ஸ்க்ரீன் டைமை குறையுங்கள்:
ஒரு வேளை நீங்கள் கணிணியில் வேலை செய்பவராக இருந்தால் ஸ்க்ரீன் பயன்படுத்தும் நேரத்தை சற்றே குறைக்க முயற்சி செய்யுங்கள். எனது நிறுவனம் நான் சிறு சிறு பிரேக் எடுத்துக் கொண்டு வேலை செய்ய எனக்கு அனுமதியளித்தது. அதனால் எனக்கு ஸ்க்ரீன் டைம் மேனேஜ்மென்ட் சாத்தியமானது.
ஒற்றைத் தலைவலி போக்கும் கண்ணாடிகள்
ஒற்றைத் தலைவலி போக்கும் கண்ணாடிகளை வாங்கிப் பயன்படுத்தலாம். லைட் சென்ஸிடிவ் கண்ணாடிகளைப் பயன்படுத்தும் போது ஒற்றைத் தலைவலியில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஸ்க்ரீன் டைமை குறைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸை ட்ரை பண்ணுங்க:
அழுத்தம் நிறைந்த நவநாகரீக வாழ்வில் ஒற்றைத்தலைவலி போன்ற உபாதைகள் பக்கவாட்டு சீர்கேடு. அதனால் அவ்வப்போது உங்கள் மீதான அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். நான் சுடோகு, ஆடியோ புக்ஸ், பசிள்ஸ் என்று எனது கவனத்தைத் திசை திருப்புவேன்.
வெளியே ஒரு வாக் செல்லலாம்:
வீட்டுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடப்பதைவிட வெளியே ஒரு குறுநடை சென்று வரலாமே. நான் எப்போதும் நீண்ட தூரம் நடந்து செல்வேன். என் வீட்டு வாண்டுகளுடன் செல்வேன். அதுபோன்று உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீங்கள் செல்லலாம்.
ஆனால் இவற்றை எல்லாம் கடந்து ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் மருத்துவர் மிஹிர் கட்ரி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வித்தியாசமான டிப்ஸ் கொடுத்துள்ளார். இது உண்மையில் சுவையான டிப்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் பரிந்துரைப்பது ராப்ரி ஜிலேபி.
ராப்ரி ஜிலேபி:
சர்க்கரை நோயாளியாக இல்லாமல் இருந்தால் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். நிறைய நரம்பிய நோய்கள் வாத தோஷத்தினாலேயே ஏற்படுகிறது என்பதால் சூரிய உதயத்திற்கு முன்னர் ராப்டி ஜலேபி சாப்பிட்டால் அது தலைவலிக்கு தீர்வு தரும் எனக் கூறுகிறார். ராப்டி என்றால் என்னவென்று கேட்கிறீர்களா? பாலை சுண்டக் காய்ச்சி அதில் கொஞ்சம் ஏலம், குங்குமப்பூ, பிடித்தமான முந்திரி, பாதாம், பிஸ்தா என எதையாவது சேர்த்து செய்யும் ஒரு க்ரீம் உணவே அது. இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும் அதில் இனிப்பான ஜிலேபியை சேர்த்து சாப்பிடலாம் என அவர் பரிந்துரைக்கிறார். இதை தனிப்பட்ட முறையில் அவரே பரிந்துரைத்திருக்கிறார்.
ஆயுர்வேதப் புத்தகங்கள் இப்படி ஒரு குறிப்பைச் சொல்லவில்லை என்றும் இது தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் கூறுகிறார். 1 முதல் 3 வாரங்கள் இதனை பின்பற்றலாம். வாரத்து 3 முறையாவது இதனை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். பயன்படுத்திவிட்டு தனக்கு ஃபீட்பேக் தருமாறும் கேட்டுள்ளார். அதேவேளையில் சர்க்கரை நோயாளிகள், லேக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம் என அவர் கூறுகிறார்.