மேலும் அறிய
Advertisement
Ginger: தினமும் ஒரு துண்டு இஞ்சி.. மேஜிக் நடக்குமா? தெரிஞ்சுக்க இதைப் படிங்க..
தினமும் இஞ்சி சாப்பிடலாமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
தென்னிந்திய சமையலில் இஞ்சி தவறாமல் இடம்பெறும். இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைப் பிரதேசங்களில் இஞ்சி அதிகமாக பயிரியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மதமான வெப்பனும் அதிக காற்று, ஈரத்தன்மை அவசியம் என்கிறனர். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் இஞ்சி சாப்பிடலாமா என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிப்பதை காணலாம்.
- இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.
- தலைசுற்றல் வாந்தி மயக்கம் பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறு குடித்துவர குணமாகலாம்.
- இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
- இஞ்சியில் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகியவை உள்ளதால் இது புத்துணர்ச்சி அளிக்கும். இதோடு புதினா சேர்த்து டீ அருந்தாலாம். உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
- இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
- இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு உணர்வு ஏற்படும்.
- இதய ஆரோக்கியத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. இதயதுக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்ப உதவுகிறது.
- சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இஞ்சி சாறு குடிகலாம்.
- சமையலில் சிறிய துண்டு அளவு இஞ்சி சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதுடன் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதால் பசியை தூண்டும். பசி எடுக்கவில்லை என்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர சரியாகும்.
- இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
- ஒரு துண்டு இஞ்சி, சிறிதளவு ஃப்ரெஷ் மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- வாரத்தில் இரண்டு நாட்கள் இஞ்சி துவையல் செய்து சாப்பிடலாம்.
- இஞ்சி, உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
- உணவு சாப்பிட்டுவிட்ட திருப்தி உணர்வைத் தரும் என்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
- இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கவும். நன்றாக துருவி எடுத்துகொள்ளவும். துருவி எடுத்த இஞ்சியை தேனில் ஊறவைத்து தினமும் ஒரு வேளை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion