அதிகாலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்..! இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க..
காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் டீ, காபி போன்ற பானங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் டீ, காபி போன்ற பானங்களை எடுத்துக்கொள்ள கூடாது. அது மட்டுமில்லாமல் மேலும் சில உணவுகளையும் எடுத்து கொள்ள கூடாது. என்ன உணவுகள் என்ன மாதிரியான விளைவுகள் வரும் என தெரிந்து கொள்வோம்.
டீ, காபி குடிக்க கூடாது. இதை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வதால், சர்க்கரை மற்றும் காபின் ஆகியவை உடலில் சேர்த்து விடும். இது நாளடைவில் உடலுக்கு பிரச்சனை ஏற்படுத்தும். இது போன்று மேலும் சில உணவுகள் இருக்கின்றன. தக்காளி - தக்காளியில், வைட்டமின் சி மற்றும் டானிக் அமிலம் நிறைந்து இருக்கிறது. பொதுவாக காலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் தக்காளி எடுத்துக்கொள்ளும்போது இதில் இருக்கும் அமிலம் சேர்ந்து அமில சுரப்பை அதிகமாகி விடும். அதனால் காலை வெறும் வயிற்றில் தக்காளி எடுத்து கொள்வதை தவிர்த்திடுங்கள்
கார்போனேடேட் பானங்கள் - வெறும் வயிற்றில் இது போன்ற சோடா பானங்கள் எடுத்துக்கொள்வது வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தும். இதனால் வயிற்றில் வீக்கம் ஏற்படும். தொடந்து வெறும் வயிற்றில் சோடா போன்ற பானங்கள் எடுத்துக்கொள்வதால், குடல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
பேக்கரி உணவுகள் - காலை அமில சுரப்பு அதிகமா இருந்தால் சிலருக்கு பசி அதிகமாக எடுக்கும். அந்த நேரத்தில் பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் ஈஸ்டு கலந்து இருப்பதால், வயிறு எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு வயிறு புண் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இனிப்புகள் - வெறும் வயிற்றில் இனிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது இது வயிற்றில் இருக்கும் அமிலங்களின் தன்மையை மாற்றி விடுகிறது. இது நாளடைவில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுத்தி,சர்க்கரை நோய் வரும். நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தயிர் - இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அமில சுரப்பதில் விளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவு எடுத்து கொண்டு ஒரு மணிநேரம் கழித்து தயிர் எடுத்து கொள்வது நல்லது. தயிர் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை தருகிறது. ஆனால் வரும் வயிற்றில் தயிர் மோர் எடுத்துக்கொள்ள கூடாது
மசாலா பொருள்கள் சேர்க்கக்கூடாது - காலை வெறும் வயிற்றில் அதிகம் காரம் சேர்த்த மசாலா பொருள்களை சேர்க்கக்கூடாது. இது அமில தன்மையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வயிறு புண்கள் வரும்.