(Source: ECI/ABP News/ABP Majha)
Street Foods : ரோட்டுக்கடை உணவுன்னா ரொம்ப பிடிக்குமா? இதை நோட் பண்ணி வெச்சுக்கோங்க மக்களே..
Foods You Must Try : தமிழ்நாட்டின் உணவுகள் வகைகள் ருசியானவை. அவற்றில் நிச்சயம் சாப்பிட வேண்டியவைகள் இவை.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கோயில்கள், கலாச்சாரம் உள்ளிட்டவைகள் எப்படி பிரபலமானதோ, அதைப்போலவே தென்னிந்திய உணவு வகைகள் பெரிதும் அனைவராலும் விரும்பப்படுவை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சமையல் முறைகள் மாறுபடும். கொங்கு சமையல், தென் மாவட்டங்களில் செய்யப்படும் பிரியாணி, கன்னியாகுமரியில் செய்யப்படும் கேரள மணம் வீசும் சமையல் வகைகள்; இப்படி வகை வகையாக உணவு முறைகள் இருக்கும். தமிழ்நாட்டில் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் சுவைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நீண்ட சுற்றுலாதான் வேண்டும்.
ஊத்தாப்பம், இட்லி, பரோட்டா மற்றும் தோசை போன்ற மிகச்சிறந்த உணவுகளில் இருந்து செட்டிநாட்டு உணவு வகைகள் வரை உலகின் எந்த உணவுகளுடனும் போட்டியிட முடியாது. சுண்டைக்காய் புளிக்குழம்பு, கத்திரிக்காய் வத்தல் குழம்பு என்ன குழம்பில் பல வகைகள் உண்டு.
அரிசி, பருப்பு, மசாலாப் பொருட்கள்,புளி, கொத்தமல்லி, மிளகாய், இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை, ஏலக்காய், தேங்காய் என பல வகைகள் உணவில் இடம்பெறும். எனவே, இந்த சுவையான ரெசிபிகளை நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், இதோ உங்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த உணவுகளில் சில.. இவை சாப்பிட தவறக்கூடாதவைகள் ஆகும்.
காளான் மசாலா
சாலையோர கடைகளில் கிடைக்கும் காளான் மசாலா. இதற்கான சுவையே தனி. காளான், முட்டைக்கோஸ் மற்றும் பிற சுவையான மசாலாப் பொருட்கள் தேவை. இதோடு சேர்க்கப்படும் முட்டைக்கோஸ் அதன் சுவையை அதிகரிக்கிறது. இந்த ரெசிபி பொதுவாக கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேர சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. எனவே, காளான் புடிக்கும் என்றால், காளான் மசாலை ஒரு மாலை நேரத்தில் செய்து சாப்பிடுங்கள்.
கொத்து பரோட்டா
கொத்து பரோட்டா பிடிக்காதவர்களே கிடையாது. தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருவபர்கள் நிச்சயம் ருசித்து சாப்பிட வேண்டியது கொத்து பரோட்டா சூடாக சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும். கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கு அதை தயாரிக்கும்போது ஏற்படும் ஒலி.. டிங். டிங்க்.. தோசைக் கல்லில் பரோட்டாவை கொத்தும் சத்தம் ஒரு வகை இசை; சிக்கன் கொத்து, பீப் கொத்து, மட்டன் கொத்து ,முட்டை கொத்து என பல வகைகள் இருக்கின்றன.
கரண்டி ஆம்லெட்
நீங்கள் ஆம்லெட் பிரியர் என்றால், இந்த ரெசிபி உங்கள் ருசி மொட்டுக்களை நிச்சயம் கவரும். கரண்டி என்பது தமிழ்நாட்டில் கரண்டி என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு பெரிய கரண்டியில் (தமிழில் தாலிப்பு கரண்டி) தயாரிக்கப்படும் விரைவான ஆம்லெட் ஆகும், இது பொதுவாக டெம்பரிங் அல்லது 'தட்கா' க்கு பயன்படுத்தப்படுகிறது.
கரண்டி ஆம்லெட்டின் பஞ்சுபோன்ற அமைப்புகளுக்கும் அடுக்குகளுக்கும் இந்த சமையல் முறை (ஒரு கடாயில் ஊற்றுவதை விட வரையறுக்கப்பட்ட இடத்தில்) காரணமாகும். முட்டைகளின் எண்ணிக்கை (பொதுவாக ஒன்று அல்லது இரண்டு) அல்லது கரண்டியின் அளவு கரண்டி ஆம்லெட்டின் வடிவம் மற்றும் அமைப்பை பாதிக்கிறது. கரண்டி ஆம்லெட் செய்முறைக்கு இங்கே கிளிக் செய்யவும்.
இடியப்பம்
இடியப்பம் ஒரு பிரபலமான காலை உணவாகும். அரிசி மாவு கொண்டு ஆவியில் வேக வைக்கப்படுகிறது இந்த உணவு. இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தோன்றிய அரிசி நூடுல்ஸ் உணவு என்று கூட சொல்லலாம். இது நூல்புட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இடியாப்பத்துடன் தேங்காய் பால், ஆட்டுக் கால் பாயா, காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் குருமா போன்றவைகள் சைடுடிஷாக நன்றாக இருக்கும்.
அத்தோ
அத்தோ, இது பர்மா உணவு வகைகளில் ஒன்று. மோஹிங்கா என்ற சூப்புடன் பரிமாறப்படுகிறது. ஆரஞ்சு நிற அத்தோ, முட்டைக்கோஸ், வெங்காயம், மிளகாய், வறுத்த கடலை பருப்பு தூள், புளி சாறு, பீஜோ பூண்டு எண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. மொறு மொறுவென்று, சூடான வாழைத்தண்டு சூப் உடன் அத்தோ சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு எண்ணெய் முட்டையையும் சாப்பிடலாம்.
இவை அனைத்தும் தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்கும்போது அவசியம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் ஆகும். மேலும், இவற்றை வீட்டிலேயேயும் தயாரித்து உண்டு மகிழலாம். இதற்கான செய்முறை வீடியோக்கள் யூடியூப்களில் நிறைய கிடைக்கின்றன. சமைத்து, சாப்பிட்டு மகிழுங்கள்.