Wheat Rava Kesari: கோதுமை ரவையில கேசரி ட்ரை பண்ணி இருக்கீங்களா? இப்படித்தான் பண்ணனும்
மிகவும் அசத்தலாக கோதுமை ரவை கேசரி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
இனிப்பு என்றால் அதிகமானோருக்கு பிடிக்கும். லட்டு மைசூர்பாக், பாயசம், கேசரி எல்லாம் வீட்டிலேயே செய்துடலாம். இப்போதெல்லாம் ஏதேனும் புதிய வகை ரெசிபியை பார்த்தால் அதை உடனே ட்ரை பன்ன ஆரம்பிச்சிடுறோம். காரணம் என்னனா செய்முறைகள் மிக தெளிவா கிடைப்பது தான்.
இப்பவும் நாம ரொம்ப ஈசியான ஒரு ஸ்வீட் ரெசிபிய தான் வீட்டில் ட்ரை பண்ணிப்பார்க்க போறோம். அது என்னன்னா கோதுமை ரவா கேசரி தான். இது சற்று சாப்பிடுவதற்கு வித்தியாசமாக குருனை குருனையாக இருக்கும். வாங்க கோதுமை ரவை கேசரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப் –250 கிராம்
வெல்லம் – 2 கப் – 500 கிராம்
நெய் – 4 ஸ்பூன்
வறுத்த முந்திரி பருப்பு – 10
உப்பு – 1 சிட்டிகை, ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து சூடானதும் 1 கப் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் ரவையை மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பின், வறுத்து வைத்து கொள்ள கோதுமை ரவையை தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
தண்ணீரில் ரவையை நன்கு கிளறியபின் மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும். 1 கிண்ணத்தில் 2 கப் வெல்லம் சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்து பாகு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாகை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
கோதுமை ரவை சாஃப்ட்டாக மாறியவுடன் எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை அதில் ஊற்றி சுமார் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். இப்போது இதில் சிறிது நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, கேசரி கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை கேசரியில் சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு , கேசரியை நன்றாக கிளறி எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை ரவை கேசரி ரெடி.
மேலும் படிக்க
Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..