Food: சூடான, சுவையான மொறு, மொறு மிளகாய் பஜ்ஜி...! எப்படி செய்வது?
நம்மால் என்றைக்குமே ‘நோ’ சொல்ல முடியாத ஸ்நாக்ஸில் ஒன்றான மிளகாய் பஜ்ஜியை உடனடியாக 30 நிமிடங்களில் மொறுமொறுவெனச் செய்வது எப்படி?
ஸ்நாக்ஸ் என்றால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று யாருமே சொல்லமாட்டோம். அதிலும் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி கிடந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் என்ன செய்வது? என்று கூகுளில் தேடாத ஆட்கள் இருக்கவே முடியாது.
மிளகாய் பஜ்ஜி:
இதற்காக பெரும் நேரத்தைக்கூட நாம் செலவழித்திருப்போம். குறிப்பாக பஜ்ஜி போண்டா பிடித்த நம்மூர் மக்களுக்கு அதனை எளிதில் செய்யும் வழிவகைகள் என்றால் கூடுதல் சுவாரசியத்துடன் படிப்பார்கள். நம்மால் என்றைக்குமே ‘நோ’ சொல்ல முடியாத ஸ்நாக்ஸில் ஒன்றான மிளகாய் பஜ்ஜியை உடனடியாக 30 நிமிடங்களில் மொறுமொறுவெனச் செய்வது எப்படி? தெரிந்துகொள்வோம்....
இந்த செய்முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன: ஒன்று ஸ்டஃபிங் தயாரித்தல் மற்றோன்று அதனை பஜ்ஜியாக செய்தல். இந்த பஜ்ஜிகளை செய்ய நீங்கள் பாவ்நாக்ரி மிளகாய் அல்லது புல்ஹார்ன் மிளகாய் போன்ற பெரிய, அடர்த்தியான மிளகாய் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை சாதாரணமாக மார்க்கெட்டிலேயே கிடைக்கும். சிறிய பச்சை மிளகாயைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் ஸ்டஃபிங் செய்ய முடியாது.
ஸ்டஃபிங் செய்ய, புளி, கொத்தமல்லி தூள்,துருவிய தேங்காய், பெருங்காயம், உப்பு மற்றும் பிரவுன் சுகர் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும்.அதை தடிமனான பேஸ்ட் போன்ற பதத்துக்குக் கொண்டு வரவும்.
பஜ்ஜி செய்ய மிளகாயை நீளவாக்கில் கீறி, விதைகளை அகற்றவும். குறைந்த தீயில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இந்த மிளகாய்கள் மென்மையாகும் வரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும், பின்னர் அந்தத் தண்ணீரை வெளியேற்றவும். மிளகாயில் ஸ்டஃபிங் பேஸ்ட்டை திணித்து, பின்னர் முழு மிளகாயையும் கடலைமாவில் தோய்த்து எடுக்கவும். மிளகாயை பொன்னிறமாகும் வரை ஆழமாக எண்ணெயில் வறுக்கவும். சூடாக எடுத்து அந்த பஜ்ஜிகளின் மேல் சிறிது சாட் மசாலா அல்லது மிளகாய்த் தூள் தூவிப் பரிமாறவும்.
பரிமாறும்போது சிலர் வெங்காயத்தைத் தூவித் தருவார்கள். அதற்குக் கூடுதல் டேஸ்டை சேர்க்க விரும்பினால், எலுமிச்சை சாறு மேலே பிழிந்து, பிற மசாலாப் பொருட்களை மேலே தூவித் தரலாம்...சாப்பிட மிகச் சுவையானதாக இருக்கும்.
மிளகாயில் மற்றொரு ரெசிபி
தென்னிந்தியாவின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை. கேரளா, செட்டிநாடு, கொங்கு நாடு, தமிழ்நாடு சமையல் என் பல உண்டு. அதே போல ஆந்திர பிரதேசத்தின் தெருக்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மிளகாய் முட்டை பொரியல் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் சில மசாலா பொருட்கள் மட்டுமே. இந்த பொரியலை செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து கொள்ளவும். தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடுகள் சுவையை கொடுக்கும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
பிறகு 5-6 பச்சை மிளகாய் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும். அனைத்தும் ஒன்றாக நன்கு கலந்த பிறகு 2-3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மிதமான தீயில் முட்டை நன்றாக வேகும் வரை காத்து இருக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, கருப்பு மிளகு தூள் சுவைக்கேற்ப சேர்த்து கலந்து விடவும். அதற்கு மேல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும். ஈஸியான நொடியில் செய்ய கூடிய இந்த மிளகாய் முட்டை பெரிய ஆந்திராவின் ஸ்ட்ரீட் உணவுகளில் மிகவும் பிரபலமானது. சுவையான ஸ்பைசியான உணவு விரும்பிகளுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ்.