சப்பாத்தி, முறுகல் தோசை முதல் அசைவ சுக்கா வரை... இதை மட்டும் ஃபாலோ பண்ணா சுவை கலக்கும்..
நீங்கள் எப்போது டீ போட்டாலும் சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்குத் தீர்வாக அமையும்
சைவ மற்றும் அசைவ குருமாக்களுக்கு தேங்காய் அரைத்து சேர்ப்பது தொடங்கி, சப்பாத்தி மிருதுவாக வர மாவுடன் நெய் சேர்த்து பிசைவது போன்ற சில டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் உங்களது சமையல் கூடுதல் ருசியாக இருக்கும்.
இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மக்கள் இயந்திரமாகி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் காலையில் அவசர அவசரமாக பணிக்கு செல்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். என்ன இருந்தாலும் பெண்களுக்கு மற்ற அலுவலக பணிகளைப்போன்று சமையலும் முக்கிய வேலையாக உள்ளது. இதற்கிடையிலும் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு யூடியூப் பார்த்தாவது புது விதமான ரெசிபிகளை செய்து தருகின்றனர். எனவே இந்நேரத்தில் சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றி உங்களது சமையலை ருசியாக்கலாம். இதோ உங்களுக்கான டிப்ஸ்….
குறிப்பாக சமைக்கும் போது கனம் குறைவான கரண்டியை தான் பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை நீங்கள் கனமாக கரண்டியைப் பயன்படுத்தினால் நீங்கள் சமைக்கும் போது சோர்வடையக்கூடும்.
ரசம் வைக்கும் போது புளி கரைசலை ஊற்றுவதற்கு முன்னதாக சீரகம், மிளகு, பூண்டு போன்ற மற்ற பொருள்களை எல்லாம் கொதிக்க வைத்து பச்சை வாசனைப்போன பின்னர் தான் புளி கரைசசை ஊற்ற வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது சூப்பரான ரசம் உங்களுக்கு கிடைக்கும்.
மோர் குழம்பு செய்யும் போது, உங்களது அடுப்பைக் குறைவாக வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மோர் திரியாமல் இருக்கும். இதோடு அரைத்த விழுதினை வதக்காமல் மோரில் ஊற்றினால் மோர் திரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
முட்டை அவிக்கும் போது எப்போதும் குறுகிய பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனால் அவிக்கும் முட்டை எளிதில் உடையாது.
நாம் செய்யும் சைவ மற்றும் அசைவ வகை குருமாக்களுக்கு தேங்காய் சேர்க்க வேண்டும். சீரகம், தேங்காய், மிளகு சேர்த்து அரைத்து சமைக்கும் போது நாம் சமைக்கும் உணவு கூடுதல் சுவையாக இருக்கும்.
சப்பாத்தி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும் என்றால், கோதுமை மாவுடன் கொஞ்சம் நெய்விட்டு பிசைய வேண்டும்.
நீங்கள் எப்போது டீ போட்டாலும் சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது.
இட்லி தட்டில் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும் என்றால், இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேகவைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும். இதோடு துணி கழுவுவதற்கும் எளிதாக இருக்கும்.
எனவே மேற்கூறிய சிறு சிறு டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் உங்களது சமையல் நிச்சயம் ருசியாக இருக்கும்.