Pasta Recipe: உடல் எடை அதிகரிக்க கூடாது; சுவையான பாஸ்தா சாப்பிடணும் - இப்டி செய்து பாருங்க!
Weight Loss Pasta Recipe: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான பாஸ்தா எப்படி செய்ய வேண்டும் என்பதை காணலாம்.
உடல் எடையை குறைக்கும் பயணம் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒருவருக்கு பயன்படும் வழிமுறைகள் இன்னொருவருக்கு பயன்படாது. ஏனெனில், தனிப்ப நபரின் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என எல்லாமே மாறுபடும். அதுவும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் முதன்மையான ஒன்று ‘அவை’ சுவையற்ற உணவாக இருக்கும் என்பதுதான். ஆனால், அது உண்மையில்லை. ஆரோக்கியமனா உணவுகள் சுவையில்லாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், உடல் எடை குறைப்பு பயணம் என்பது நீண்ட நாட்கள் வரை பின்பற்ற வேண்டியது. 3 மாதத்தில், 6 மாதத்தில் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று நம்பிக்கை உள்ளவர்கள் அதற்கேற்றவாறு பின்பற்ற வேண்டியவற்றை சரியாக செய்ய வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது பலருக்கும் உதவலாம். பாஸ்தா, பானி பூரி உள்ளிட்டவற்றை சிலருக்கு சாப்பிடாமல் இருக்கவே முடியாது. அவர்களுக்கு நிறைய ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும் பாஸ்தா உணவை ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைப்பதை காணலாம். பென்னே, மேக்ரோனி, Fettuccin, ஸ்பிரிங் பாஸ்தா உள்ளிட்ட பல வகைகளில் கிடைப்பதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், கோதுமை மாவு பயன்படுத்தி செய்யப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். இல்லையெனில், வீட்டிலேயே பாஸ்தா தயாரித்து அதன் பிறகு செய்யலாம். காய்கறி, இறைச்சி என அதில் சேர்த்து செய்யலாம். இருப்பினும், மாதம் ஒரு முறை மட்டுமே பாஸ்தா சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
பாஸ்தா சாப்பிடலாமா?
கடந்த 2020-ல் வெளியிடப்பட்டு Frontiers in Nutrition ஆய்வு இதழில் டயட் பின்பற்றுபவர்கள், பின்பற்றாதவர்கள் என யாராக இருந்தாலும் அளவோடு எந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதான். பாஸ்தாவை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு உதவாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் நிறைந்த பாஸ்தா செய்வது எப்படி?
கோதுமை, சிறுதானியங்கள் பயன்படுத்தி பாஸ்தா செய்வது மிகவும் நல்லது. அதோடு, காய்கறிகள், இறைச்சி என அதில் சேர்ப்பது ஊட்டச்சத்து நிறைந்ததாக மாற்றும். பாஸ்தா சாஸ் செய்யும்போது பரங்கிக்காய் சேர்த்து தயாரிக்கலாம்.
பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:
பாஸ்தா ஒன்றோடுண்டு ஒட்டாமல் இருக்க வேகவைக்கும்போது தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட வேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பதும் உதவும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும்.
7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிவிட வேண்டும்.
பரங்கிக்காய் பாஸ்தா செய்முறை:
மஞ்சள் பூசணி என்றழைக்கப்படும் பரங்கிக்காய் ஒன்றை வைத்து சுவையான பாஸ்தா எளிதாக அதிக நேரம் எடுக்காமல் செய்துவிடலாம்.
என்னென்ன தேவை?
பாஸ்தா - 250 கிராம்
பரங்கிக்காய் - 250 கிராம்
பூண்டு - சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
சீஸ் - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 4
செய்முறை:
பாஸ்தாவை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் தேவைப்படும். பரங்கிக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். பரங்கிக்காய் ஆறியதும் அதோடு ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.தக்காளியுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம். தக்காளியின் புளிப்புக்கு ஏற்றவாறு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம். இதெல்லாம் தயாரித்துவிட்டால் அரை மணி நேரத்திற்குள் பாஸ்தா தயாரித்துவிடலாம்.
கடாய் ஒன்றில் வெண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி விழுது சேர்த்து என்றாக வதக்கவுன். தக்காளி விழுது நன்றாக கொதித்து சேர்ந்ததும் அதில் பாஸ்தா சேர்க்கவும். அடுத்து பரங்கிக்காய் விழுது, சீஸ் சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடங்கள் அடுப்பில் இருக்கட்டும். இத்தாலியன் ஹேர்ப்ஸ் சேர்க்கலாம். ஃப்ரெஷ் க்ரீம் கொஞ்சம் சேர்க்கலாம். விருப்பம் எனில் கொத்தமல்லி தழைகள் தூவி அடுப்பில் இறக்கினால் போது. பரங்கிக்காய் பாஸ்தா தயார்.