(Source: Poll of Polls)
Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!
ஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/2 கப் கருப்பு உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் பச்சை அரிசி
3/4 கப் பனை வெல்லம்
1/2 கப் இஞ்சி எண்ணெய்
1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
செய்முறை
ஒரு கடாயை சூடாக்கி, கருப்பு உளுத்தம் பருப்பை குறைந்த தீயில் வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
அதே கடாயில் அரிசியை சேர்த்து வறுத்து ஆற வைக்க வேண்டும். இவை இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். ஒரு வடிகட்டியைக் கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லம் பாகில் அரைத்த கருப்பு உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி தூள் சேர்த்து கிளறி விட்டு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இப்போது இது ஒரு கெட்டியான லிக்விட் பதத்தில் இருக்கும் இது களி பதத்திற்கு வரும் வரை அடிப்பிடிக்காமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே இதில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
கலவைஎண்ணெய்யை முழுமையாக உறிஞ்சும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது இது லிக்விட் பதத்தில் இருந்து கட்டிப் பதத்திற்கு மாறி இருக்கும். களி பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு களியை அடுப்பில் இருந்து இறக்கி பறிமாறவும்.
உளுந்தின் பயன்கள்
உளுந்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிப்பதில் உதவும் என சொல்லப்படுகிறது.
உளுந்தில் உள்ள நார்ச்சத்து கழிவுப்பொருட்களை வெளியேற்ற பெரிஸ்டால்சிஸ், சுருக்கம் மற்றும் வயிற்று தசைகளின் வெளியீட்டை தூண்டும் என சொல்லப்படுகிறது.
உளுந்து பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது.
உளுந்தில் உள்ள புரதச் சத்து தசை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது.
தசை வளர்ச்சி பெறவும் வலிமை பெறவும் உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..
TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..