குளிர்காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்? இதை ட்ரை பண்ணி பாருங்க!
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பருவகால பிரச்சினைகளைத் தடுக்கவும் சில பருவகால உணவுகளை உட்கொள்வது முற்றிலும் முக்கியமானது
குளிர்காலத்தில், ஒருவர் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வானிலை மாற்றம் காரணமாக அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். இத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பருவகால பிரச்சனைகளைத் தடுக்கவும் சில பருவகால உணவுகளை உட்கொள்வது முற்றிலும் முக்கியமானது. இந்த பருவத்தில் உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவும் சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.
"குளிர்காலத்தில் இந்த பொருட்கள் மிகவும் உதவியாக இருப்பதற்கான காரணங்கள் இங்கே உள்ளன" என்று அது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிபுணர் ஒருவர் எழுதியுள்ளார்.
நெய்
View this post on Instagram
நெய் கலோரிகளை சேர்க்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது சிறிய அளவில் உட்கொள்ளும் போது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
வெல்லம்
வெல்லம், உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களை சூடாக வைத்திருக்கவும் செய்கிறது.
சூடான சூப்கள்
குளிர்கால மாலையில் சூடான சூப் சாப்பிட விரும்பாதவர் யார்? குளிரிலிருந்து உடனடி அரவணைப்பைப் பெற இது சிறந்த வழிகளில் ஒன்றாகும்
உலர் பழங்கள்
உலர் பழங்கள் குளிர்காலத்தில் சாப்பிட சிறந்த உணவுகளில் ஒன்றாகும். ஆப்ரிகாட், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை இயற்கையான சூட்டைத் தரும் என்று நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
குங்குமப்பூ
உங்கள் உடல் சூடாக இருக்க வேண்டுமெனில், பாலில் குங்குமப்பூவை வேகவைத்து, அதில் திராட்சையை சேர்த்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார். இது சுவையான பானங்களில் ஒன்றாகும்.