Kulfi Point : ஒரே கடையில் குல்பியும்.. தங்கமும்.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இது வேற மாரி..
ஒவ்வொரு கடைக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுதான் அந்தக் கடையின் யுஎஸ்பி. அதாங்க யுனிக் செல்லிங் பாய்ண்ட். அது சிலர் எம்பிஏ கற்றுக்கொண்ட செய்வார்கள். சிலர் மரபுவழியாக கற்றுக்கொண்டு செய்வார்கள்.
ஒவ்வொரு கடைக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுதான் அந்தக் கடையின் யுஎஸ்பி. அதாங்க யுனிக் செல்லிங் பாய்ண்ட். அது சிலர் எம்பிஏ கற்றுக்கொண்ட செய்வார்கள் சிலர் மரபுவழியாக கற்றுக் கொண்டு செய்வார்கள். இன்னும் சிலர் தாமாகவே இனோவேட்டிவாக ஏதாவது யோசித்துச் செய்வார்கள். மத்தியப்பிரதேசத்தில் உள்ள பண்டி யாதவ் கடையும் அப்படி ஒரு வித்தியாசத்தை தன்னகத்தே கொண்ட கடைதான்.
View this post on Instagram
பிரகாஷ் குல்ஃபி கடை:
பிரகாஷ் குல்ஃபி கடை என்பதுதான் பண்டி யாதவின் கடையின் பெயர். அவரது கடை மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ளது. இவரது கடையில் பல்வேறு விதமான குல்ஃபிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அந்த குல்ஃபிக்களின் ருசிக்காக மட்டும் இவர் கடைக்கு யாரும் வருவதில்லை. இவர் அணிந்திருக்கும் நகைக்கும், இவரது அழகான தலைப்பாகைக்காகவும் சேர்த்துதான் வருகின்றனர். தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள், என 2 கிலோ தங்க நகைகளை சுமந்து கொண்டுதான் பண்டி யாதவ் குல்ஃபி விற்கிறார். அதனால் அவர் இதனை சிலேடையாக என் கடையில் நான் தங்கம் விற்கிறேன் எனக் கூறுகிறார்.
அதாவது தங்கம் போல் தரமான குல்ஃபி விற்பதை இவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். நான் அணிவது எதுவும் எனக்கு பெருமை தரவில்லை. என் குல்ஃபியை சாப்பிட்டுவிட்டு நீங்கள் சொல்லும் விமர்சனங்கள் தான் முக்கியம். நான் இதுவரை நான் அணிந்திருக்கும் நகை எவ்வளவு எடை கொண்டது என பரிசோதித்தது இல்லை. ஆனால் ஒன்றரை முதல் 2 கிலோ வரை இருக்கலாம். எனக்கு இவ்வளவு நகை அணிந்து வருவதால் திருடர்கள் பற்றி எந்த அச்சமும் இல்லை. ஏனென்றால் இந்தூர் நகரம் அவ்வளவு பாதுகாப்பான நகரம். என் கடைக்கு வருபவர்கள் என் கடையின் பிரத்யேக குல்ஃபிக்களை ருசித்துவிட்டு என்னுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். எனது கடை குல்ஃபி, ஃபலூடாதான் பெஸ்ட் என்று நான் அடித்துச் சொல்வேன் என அவர் கூறுகிறார்.
இவரைப் பார்த்தவுடன் நம்மூர் வரிச்சூர் செல்வம் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர் டெரர் பீஸ் இவர் கூல் பீஸ் என்பது தான் ஆறு வித்தியாசமும்...!