News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Today Recipe: தவா ப்ரான் மசாலா செய்யலாமா? அசத்தலாக செய்வது எப்படி?

ப்ரான் தமிழில் இறால் என்பது கடல் உணவுகளின் ராஜாவாகப் பார்க்கப்படுகிறது. காரணம் அதன் விலை மட்டுமல்ல. அதன் ருசியும் தான். ஃப்ரை, தொக்கு, குழம்பு, பிரியாணி, காக்டெய்ல் என எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு பொருள் இறால்.

FOLLOW US: 
Share:

இறால்:

இறால் சாப்பிடுவதால் உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். இறாலில் அப்படியென்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா?  இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குநல்ல நிவாரணியாக இருக்கும்.

சரிவாங்க நாம் தவா ப்ரான் ரெஸிபிக்குப் போகலாம்..

தேவையான பொருட்கள்:

நரம்பு நீக்கிய இறால்கள் (பெரியது) 8 எண்ணம்
ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய்,
2 பல் பூண்டு,
மல்லி இலை
லெமன் ஜூஸ்
பொடியாக நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
மிளகாய் தூள்
மிளகுத்தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
சோம்பு
மல்லித் தூள்
பட்டைத்தூள்

செய்முறை
1. முதலில் இறாலில் இருந்து அதன் நடுவே இருக்கும் கருப்புநிற நரம்பை நீக்க வேண்டும்
2. கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கொஞ்சம் மிளகாய் தூள் போடவும். பின்னர் அதில் டீவெய்ன் செய்த இறால்களைப் போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 
3. பின்னர் அதே பேனில் எண்ணெய் ஊற்றி பட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளவும். 
4. பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
5. இது நன்றாக கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறாலை சேர்க்கவும். மசாலில் இருந்து எண்ணெய் பிரிந்தவுடன் அதன் மீது கொஞ்சம் எலுமிச்சை சாறு ஊற்றவும். பின்னர் மல்லி இலை தூவி பரிமாறவும். 

Published at : 19 Apr 2023 07:30 AM (IST) Tags: Tawa Prawn Masala Recipe Tawa Prawn

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!