Wheat Chilli Masala: கோதுமை சில்லி மசாலா! சில்லி பரோட்டாவை மிஞ்சும் சுவையில் இப்படி செய்து அசத்துங்க!
கோதுமை சில்லி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி -2
குடை மிளகாய் - 1 சிறியது
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை- 2 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு தளர்வாக இல்லாமல் சற்று கெட்டிப் பதத்தில் இருக்க வேண்டும். இப்போது இதை சப்பாத்தியா திரட்டவும், சப்பாத்தியை, சப்பாத்தி கட்டையில் இருந்து எடுக்காமல் அதன் மேல் பகுதியில் மட்டும் எண்ணெய் தடவ வேண்டும்.
பின் இதை ரோல் செய்துகொள்ள வேண்டும். பின் இதை பீன்ஸ் நறுக்குவது போல் சற்று சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் மாவையும் இதே போன்று சப்பாத்தியாக திரட்டி, பின் ரோல் செய்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்துள்ள கோதுமை துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது தலா, இரண்டு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு சிறிய சைஸ் குடை மிளகாயையும் நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பின் நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கவும். சற்று வதங்கியதும், இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இதை வதக்கி விட்டு ஓரளவு வதங்கியதும், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கிளற வேண்டும்.
ஏற்கனவே கோதுமை மாவில் உப்பு சேர்த்திருப்பதால், இப்போது செய்யும் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போகு வரை கிளறி விட வேண்டும். இப்போது நாம் பொரித்து வைத்துள்ள கோதுமை துண்டுகளை மசாலாவில் சேர்த்து கிளற வேண்டும். இப்போது இதன் மீது கொத்தமல்லித் தழை தூவி இறக்கி கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான கோதுமை சில்லி தயார். இதன் சில்லி பரோட்டா போன்று இருக்கும். மேலும் இந்த ரெசிபியை நாம் கோதுமை மாவு பயன்படுத்தி செய்வதால் பரோட்டாவை விட சிறந்ததாக இருக்கும்.
மேலும் படிக்க
Cauliflower Pepper Masala: காலிஃபிளவர் மிளகு மசாலா! இப்படி செஞ்சா சுவை அசத்தலா இருக்கும்!
Sweet Potato Halwa: நார்ச்சத்து மிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தித்திப்பான அல்வா செய்து அசத்துங்க!