(Source: ECI/ABP News/ABP Majha)
Sweet Potato Halwa: நார்ச்சத்து மிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தித்திப்பான அல்வா செய்து அசத்துங்க!
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து எப்படி சுவையான அல்வா செய்வது? என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
செய்முறை
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி குக்கரில் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
3 விசில் வந்தவுடன் இறக்கி தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதே கடாயில் மசித்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து விட வேண்டும். இப்போதும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கட்டிகள் இல்லாமல் கரண்டி கொண்டு நன்றாக மசித்து விடலாம்.
பின் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ல வேண்டும். இப்போது அதே கடாயை கழுவி விட்டு அடுப்பில் வைத்து அதில் காபி குடிக்கும் அளவில் உள்ள டம்ளரில் முக்கால் கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது முக்கால் கப் பொடித்த சர்க்கரையை தண்ணீரில் சேர்த்து உருகியதும் வடிகட்டி எடுத்து மீண்டும் கடாயில் சேர்த்து சற்று கொட்டிப்பதம் வறும் வரை கொதிக்க விடவும். ( ஒரு கப் மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கிற்கு முக்கால் கப் வெல்லம் போதுமான அளவாக இருக்கும்.)
பின் மசித்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை இதில் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு பின் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகும் வரை கிளறி விட்டு பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார். இதை அப்படியே பரிமாறலாம். அல்லது நெய்யில் வறுத்த பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக்! சுவையாக செய்வது எப்படி?
Apple Benefits: இத்தனை வகை ஆப்பிள்கள் உள்ளதா? ஆரோக்கிய நலன்களும் ஏராளம் - இப்போவே வாங்கி சாப்பிடுங்க
Oats Venpongal: நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ்.. வெண்பொங்கல் இந்த மாதிரி செய்து அசத்துங்க...