மேலும் அறிய
Advertisement
சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி! கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?
ராகி ரொட்டி கச்சோரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மாலை நேர டீ டைமில் சாப்பிட ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் எப்படி தயார் செய்வது? என்று தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். வாங்க ராகி ரொட்டி கச்சோரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- உப்பு சுவைக்கேற்ப
- 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
- வேகவைத்த பட்டாணி
- ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள்
- 1 ராகி ரொட்டி பாக்கெட்
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கலவையை கலக்கவும்.
3.வேகவைத்த பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, வேக வைக்க வேண்டும். இந்தக் கலவையை அடிக்கடி கிளறி விட வேண்டும். மசாலா பட்டாணி உருளைக்கிழங்கு அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
4.ராகி ரொட்டி துண்டுகளை எடுத்து, துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும். ப்ரெட்டின் ஓரப் பகுதிகளை அகற்றி விட வேண்டும்.
5. துண்டின் மையத்தை தட்டையாக்கி, பின்னர் அதை தண்ணீரில் துவைத்து எடுக்க வேண்டும்.
6. ப்ரெட் துண்டின் மையத்தில் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை நிரப்ப வேண்டும்.
7.மற்றொரு துண்டுடன் ஸ்லைஸை மூடி, விளிம்புகளை மெதுவாக அழுத்த்தி கச்சோரியை மூடவும்.
8. இதை வறுத்தெடுக்க ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
9.எண்ணெய் சூடானதும், தயார் செய்து வைத்துள்ள கச்சோரிகளில் ஒவ்வொன்றாக எண்னெயில் போட வேண்டும்.
10.இருபுறமும் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை வேக விட வேண்டும்.
11.இப்போது சூடான, சுவையான கச்சோரி தயாராகி விட்டது. இதை புதினா சட்னி அல்லது கெட்சப் உடன் வைத்து சப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion