உளுந்து வடைதான் ஃபேவரைட்டா? உருளைக்கிழங்கு வடைதான் இப்போ ட்ரெண்ட்
சுவையான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வதென பார்க்கலாம் வாங்க..
உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். அந்த அளவுக்கு பெரும்பாலானோரின் பேவரெட் லிஸ்ட்டில் நிச்சயம் உருளைக்கிழங்கு இடம் பெற்றிருக்கும். உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யப்படும் வறுவல், கூட்டு, பூரி கிழங்கு, போண்டா உள்ளிட்ட பல்வேறு ஐட்டங்களும் சுவையில் தூள் கிளப்பும். வடையில் மசால் வடை, உளுந்து வடை, கீரை வடை என பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் விட சுவையான வடையை உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி செய்யலாம். உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க:
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கையளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும். அதற்குள் மற்ற பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்
உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை உறித்து மசித்துக் கொள்ளவேண்டும். அதோடு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூ, கரம் மசாலா, மஞ்சல் தூள் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும்.
பின் எண்ணெய்யை காய வைத்து உருண்டைகளாகவோ அல்லது தட்டையாகவோ தட்டிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சூடான உருளைக்கிழங்கு வடை தயார்.
இதனை கொத்தமல்லி சட்னி, கார சட்னி ஆகிவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
மேலும் படிக்க,