Instant Oats Idly: இன்ஸ்டண்ட் ஓட்ஸ் இட்லி இந்த மாதிரி செய்து பாருங்க.. உங்க ஃபேவரெட் டிஷ் ஆகிடும்!
சுவையான ஓட்ஸ் இட்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் -1 கப்
ரவை - 1 கப்
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
பீன்ஸ் - 2
கேரட் -1
தேங்காய் - நறுக்கியது 2 ஸ்பூன்
தயிர்- அரை கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு கப் ஓட்ஸ் மற்றும் அரை கப் ரவையை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரவையுடன் அரை கப் புளித்த தயிர் சேர்த்து, அரைத்த ஓட்ஸையும் இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். ஒன்றரை கப் தண்ணீரையும் இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு 15 நிமிடம் மூடி வைத்து விட வேண்டும்.
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து பொரிந்ததும், ஒரு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, 10 முந்திரி,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய கேரட் 1, பொடியாக நறுக்கிய தேங்காய் இரண்டு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் இரண்டு , பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்க வேண்டும்.
இதை தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை சிறிது தண்ணீரில் கரைத்து மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். மாவு இப்போது மிகவும் கெட்டிப் பதத்திற்கு வந்திருக்கும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். ( மாவில் அதிக தண்ணீர் சேர்த்து விட கூடாது). அனைத்துப் பொருட்களும் மாவு முழுவதும் பரவி இருக்கும் வகையில் மாவை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இப்போது இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து இதை வழக்கம் போல் இட்லி தட்டில் ஊற்றி அவிக்க வேண்டும்.
இட்லி வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு சில நிமிடங்களுக்குப் பின் இதை இட்லி தட்டில் இருந்து எடுத்து விடலாம். இந்த இட்லி மிகவும் சுவையாக பூ போல் சாஃ டாக இருக்கும்.
மேலும் படிக்க
Ragi Dosa :இன்ஸ்டன்டன்ட் ராகி தோசை: இப்படி செய்தால் மொறு மொறுவென சூப்பரா இருக்கும்!