News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Potato Snack: உருளைக்கிழங்கில் மொறு மொறு ஸ்நாக் இப்படி செய்து அசத்துங்க!

Potato Snack: சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

உருளைக்கிழங்கில் சமைக்கும் அனைத்து ரெசிபிகளையும் நாம் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இந்த ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட பெஸ்ட் ஸ்நாக் ரெசிபியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

மூன்று மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா அரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு நறுக்கியது, சுவைக்கேற்பவாறு உப்பு, மிளகுத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா தூள் கால் கப், ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து விட்டு, வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 

பின் இரண்டு பிரட்டை எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து டோஸ்ட் செய்ய வேண்டும். இந்த பிரட் பொன்னிறமாக மாறும் அளவு டோஸ்ட் செய்து எடுத்து ஆற விடவும். பின் இந்த பிரட்டை துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த துகளை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும். 

வேறொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். 

இப்போது நாம் தயாரித்த வடையை இதனுள் சேர்த்து எடுத்து பின் இதை பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும். 

மேலும் படிக்க 

House Hold Tips: அரிசியில் உள்ள புழு, பூச்சி நீங்க... சூடான இட்லி தட்டிலிருந்து ஒட்டாமல் எடுக்க: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!

One-Pot Pasta Recipe: ஸ்நாக்ஸ் க்ரேவிங்கா? ஒன் பாட் பாஸ்தா ரெசிபி இதோ!

Published at : 20 Apr 2024 04:46 PM (IST) Tags: potato snack recipe evening snack crispy potato snack

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்

கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்

ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!

ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!

Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?

Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?

India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!

India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!