News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Summer Veg Pasta: பாஸ்தா, காய்கறி அதோடு இந்திய சமையல் மசாலா சேர்த்து செய்யும் உணவு. இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வது என்று இங்கே காணலாம்.

FOLLOW US: 
Share:

பாஸ்தா பிடிக்கும்; ஆனால், இந்திய சமையல் முறைப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சம்மர் வெஜ் பாஸ்தா செய்து சாப்பிடலாம். 

சம்மர் வெஜ் பாஸ்தா

என்னென்ன தேவை?

பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) -  250 கிராம்

பச்சை பட்டாணி - 1 1/2 கப்

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று

துருவிய கேரட் - அரை கப்

வேகவைத்த ஸ்வீட்கார்ன் - அரை கப்

க்ரீம் - அரை கப்

பூண்டு - 2 பல்

செர்ரி தக்காளி - அரை கப்

துருவிய சீஸ் - ஒரு கப்

பால் - ஒரு கப்

உப்பு -தேவையான அளவு

ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)

செய்முறை:

பாஸ்தாவில் சேர்க்க வேண்டிய மூன்று வண்ண குடைமிளகாய், ஸ்வீட்கார்ன், கேரட், செர்ரி தக்காளி, பச்சை பட்டாணி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின், அதில் பாஸ்தா, கலந்து 1 நிமிடம் வதக்கவும். இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.

10 -15  நிமிடங்களுக்குள் வெந்துவிட்டும். பாஸ்தா, காய்கறிகள் வெந்ததும்,  அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.

பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:

பாஸ்தாவை வேக வைக்க வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயம்.  0தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட வேண்டும். அதோடு சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பாஸ்தா குழையாமல், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உதவும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்க வேண்டாம். 7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும்.  அதன் மீது அறைவெப்பநிலையில் உள்ள தண்ணீரை ஊற்றலாம். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.

பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம். சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்தில் செய்யவது எப்படி என்று காணலாம். 

இட்லி பாஸ்தா

இடலி - தேவையான அளவு 1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 கப் குடைமிளகாய், 1 கப் தக்காளி,  எண்ணெய் அல்லது வெண்ணெய் ஒரு ஸ்பூன், பெருங்காய தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன்,  சிவப்பு மிளகாய்ப் பொடி ஒரு ஸ்பூன் (காரத்திற்கு எற்றவாறு சேர்த்துகொள்ளலாம்.), சோயா சாஸ் ஒரு ஸ்பூன். உப்பு தேவையான அளவு சேர்க்கலாம். 

செய்முறை:

இட்லி பாஸ்தா எளிதாக செய்து விடலாம். இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்,  சீரகம் சேர்க்கவும். அது பொரிந்ததும் வெங்காய்ம், காய்கறி சேர்க்கவும். நன்றாக வதக்க வேண்டும். இதோடு, மிளகாய் தூள், உப்பு, சேர்க்கவும். பின்னர், பாஸ்தா சாஸ், சோய் சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் இட்லியை சேர்க்கவும். இட்லி மசாலாவில் நன்றாக கலந்திருக்க வேண்டும். அவ்ளோதான் இட்லி பாஸ்தா தயார். 

Published at : 30 May 2024 07:58 PM (IST) Tags: @food Healthy lifestyle Lifestyle Summer Veg Pasta

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை