News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Soya Tikka Masala: நாண், சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்; சோயா டிக்கா மசாலா ரெசிபி இதோ!

Soya Tikka Masala: சோயா சங்க்ஸில் சுவையான மசாலா செய்வது எப்படி என்று காணலாம்.

FOLLOW US: 
Share:

சோயா மீல் மேக்கர் சிலருக்கு ஃபேவரைட். பிரியாணி, தக்காளி சாதம் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட பிடிக்கும். அப்படியெனில், சோயா சங்கஸ் வைத்து மசாலா, சுவையான 65 உள்ளிட்டவற்றை செய்து சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் வைத்து செய்யும் ஒரு க்ரேவியின் செய்முறையை இங்கு காணலாம்.

சோயா டிக்கா மசாலா

என்னென்ன தேவை?

சோயா சங்க்ஸ் - 100 கிராம்

தயிர் - ஒரு கப்

வெங்காயம் - 4 

தக்காளி - 2

குடை மிளகாய் -  3

மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் 1/4 டீ ஸ்பூன்

தந்தூரி மசாலா - 1 டீ ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

பாப்ரிக்கா - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

பட்டை - சிறிதளவு

செய்முறை

இந்த மசாலா செய்வதற்கு முதலில் சோயா சங்க்ஸ் சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து அதை வேக வைக்க வேண்டும். அது வேகும் நேரத்தில் வெங்கயாம், பச்சை நிற குடைமிளகாய் ஆகியவற்றை சதுர வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும். வெந்த சோயா சங்க்ஸை வடிக்கடி எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், வேக வைத்த சோயா சங்க்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். இதோடு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, உப்பு, கடலை மாவு, இஞ்சிப் பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு, இந்த கலவையை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சேர்க்க வேண்டும். 8 -10 நிமிடங்கள் சோய சங்க்ஸ் நிறம் மாறி, மிளகாய் தூள் வாசனை நீங்கியதும் தனியே எடுத்து வைக்கவும். இப்போது, டிக்கா மசாலா தயாரிக்கும் நேரம். கடையில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து அது பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

இப்பொது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அது சிறிது வதங்கியதும் மிளகாய், தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இது 10 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். இந்நிலையில், ஒரு கப் தண்ணீரை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சோயா டிக்கா மசாலா தயார். சப்பாத்தி, தோசை ஆகியவ உணவுகள் சாப்பிட சுவையாக இருக்கும். 

Published at : 13 Jul 2024 05:56 PM (IST) Tags: Health Health Tips Soya Tikka Masala

தொடர்புடைய செய்திகள்

Pasta Recipe: உடல் எடை அதிகரிக்க கூடாது; சுவையான பாஸ்தா சாப்பிடணும் - இப்டி செய்து பாருங்க!

Pasta Recipe: உடல் எடை அதிகரிக்க கூடாது; சுவையான பாஸ்தா சாப்பிடணும் - இப்டி செய்து பாருங்க!

No-Bake Blueberry Cheesecake: கேக் சாப்பிட ஆசையா? எளிதாக செய்யலாம் - சீஸ் கேக் ரெசிபி இதோ!

No-Bake Blueberry Cheesecake: கேக் சாப்பிட ஆசையா? எளிதாக செய்யலாம் - சீஸ் கேக் ரெசிபி இதோ!

Mutta Idli : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன முட்டை இட்லி ரெசிப்பி.. 10 நிமிஷத்துல..

Mutta Idli : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன முட்டை இட்லி ரெசிப்பி.. 10 நிமிஷத்துல..

Egg Curry: அசத்தல் சுவையில் முட்டை கிரேவி; எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!

Egg Curry: அசத்தல் சுவையில் முட்டை கிரேவி; எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!

மாரடைப்பு பயமா? அபாயத்தை தடுக்க இதை கண்டிப்பா பின்பற்றுங்க மக்களே..

மாரடைப்பு பயமா? அபாயத்தை தடுக்க இதை கண்டிப்பா பின்பற்றுங்க மக்களே..

டாப் நியூஸ்

91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?

91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?

Breaking News LIVE: தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்!

Breaking News LIVE: தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"தமிழ் நடிகைகளையும் அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க" : நடிகை சனம் ஷெட்டி குற்றச்சாட்டு