Quinoa Khichdi: ஊட்டச்சத்து நிறைந்த கினோவா கிச்சடி செய்வது எப்படி?
Quinoa Khichdi: குயினோவா கிச்சடி செய்வது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
100 கிராம் குயினோவாவில் 4.4 கிராம் புரதம், 1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மெக்னீசியம் அடங்கியிருக்கிறது. இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் குயினோவாவை டயட்டில் சேர்த்துகொள்கின்றனர். குயினோவா கிச்சடி எப்படி செய்வது என்று காணலாம்.
குயினோவா சால்ட்
என்னென்ன தேவை?
குயினோவா - 100 கிராம்
தண்ணீர் - 2 கப்
பாசிப் பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - ஒரு கப்
கேரட் - 2
உப்பு- தேவையான அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்.)
செய்முறை:
பட்டாணி, குயினோவாவை தண்ணீரில் ஊறை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறை வைத்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட்டை நீள வாக்கில் சிறியதாக நறுக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் நெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு, கேரட், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
5 நிமிடங்கள் வதங்கியதும், இதோடு குயினோவா சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூடி 2-ல் இருந்து 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து நெய் சிறிதளவு ஊற்றி, கொத்தமல்லி தழைகள் ஊற்றி இறக்கவும். குயினோவா கிச்சடி ரெடி.
குயினோவா நன்மைகள்
இரும்பு சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ், சிங்க் ஆகிய சத்துகள் நிறைந்தது. இதில் கலோரிகளும் குறைவு. குடல் பாக்டீரியாக்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது என்பதால் ஒட்டுமொத்த உடல் இயக்கமும் சீராக நடைபெற உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வைட்டமின் இ, பி வைட்டமின்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. அமினோ ஆசிட் நிறைந்தது.
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், டயர் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல், ஆரோக்கியமாக இருப்ப விரும்புபவர்கள் இதை சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்..