மேலும் அறிய

Punjabi Baigan Bharta: சுவையான பஞ்சாபி கத்தரிக்காய் பரத்தா எப்படி செய்வது? இப்படித்தான்!

பஞ்சாபி கத்தரிக்காய் பரத்தா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

2 கத்திரிக்காய் -1 டீஸ்பூன்,  எண்ணெய்-1 டீஸ்பூன்,  நெய்-1 டீஸ்பூன்,  பூண்டு நறுக்கியது, 1 அங்குல இஞ்சி, நறுக்கிய 1 பச்சை மிளகாய், நறுக்கிய 2 வெங்காயம், நறுக்கிய 2 தக்காளி, நறுக்கிய 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 டீஸ்பூன் சீரக தூள், 1 தேக்கரண்டி பஞ்சாபி கரம் மசாலா, சுவைக்கேற்ப -உப்பு, அழகுபடுத்த ஃப்ரெஷ் கொத்தமல்லி. 

செய்முறை

1. கத்திரிக்காயை கழுவி உலர வைக்க வேண்டும்.

2. கத்தரிக்காயை துண்டுகளாக்கி அதன் மீது எண்ணெய் தடவவும்.

3. கத்தரிக்காயை நேரடியாக தீயில் வறுத்து (roast) எடுக்க வேண்டும். கத்தரிக்காய் அனைத்து புறங்களும் roast ஆகும் வரை 10-12 நிமிடங்களுக்கு முழுமையாக வறுக்க வேண்டும். அனைத்து பகுதிகளும் சமமாக roast ஆகும் வரையில் கத்தரிக்காயை திருப்பி திருப்பி வேக வைக்க வேண்டும்.

4. கத்தரிக்காய் ஆறிய உடன் அதன் தோலை உறித்து எடுத்து விட வேண்டும்.

5. வறுத்த கத்தரிக்காயை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, ஒரு முட்கரண்டி அல்லது உருளைக்கிழங்கு மாஷரைப் பயன்படுத்தி மசித்து எடுத்து அதை தனியாக வைத்து விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து மிதமான சூட்டில் சூடாக்கவும். சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

6. சுமார் 2 நிமிடங்கள் நிறம் மாறத் தொடங்கும் வரை வதக்க வேண்டும்.

7.பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2-லிருந்து 3 நிமிடங்கள் கண்ணாடிப்பதம் வரை வதக்க வேண்டும். அவற்றை பழுப்பு நிறமாகும் வரை வதக்க வேண்டாம்.

8. இதனுடன் இப்போது நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். தக்காளியை சுமார் 5 நிமிடங்கள் நன்கு குழையும் வரை வேக வைக்கவும். இப்போது மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும். 

9. இப்போது சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், சீரக தூள், பஞ்சாபி கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விடவும்.

10. இப்போது கடாயில் வறுத்து ஸ்மாஷ் செய்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்க்க வேண்டும்.

11.கத்தரிக்காயை மேலும் 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.

12. ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறலாம். இதனை சூடான சாதம் சப்பாத்தி போன்றவற்றுடன் வைத்து சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும். 

மேலும் படிக்க 

ODI WC 2023 ENG vs SL: கட்டாய வெற்றி நெருக்கடி! பெங்களூரில் ஆதிக்கம் செலுத்தப்போவது இங்கிலாந்தா? இலங்கையா?

Droupadi Murmu: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகை.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget