Aval Cutlet : டேஸ்டியான அவல் கட்லெட்.. ஈசியா செய்யலாம்... செய்முறை இதோ...
சுவையான அவல் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. உருளைக்கிழங்கு கட்லெட், காளான் கட்லெட், கருணைக்கிழங்கு கட்லெட் என பல்வேறு வகைகள் உள்ளன. தற்போது நாம் அவலில் எப்படி கட்லெட் செய்வது என்று தான் பார்க்க போறோம். இந்த கட்லெட் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இதை குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கட்லெட்டை விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 2 கப் (பொடியாக நறுக்கியது) ,அவல் - 1/2 கப், பச்சை பீன்ஸ் - 6 பொடியாக நறுக்கியது, கேரட் - 1 துருவியது, துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் , மாங்காய் தூள் - 1/4 டீஸ்பூன் , கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு, பிரட் தூள் - தேவையான அளவு , உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை
முதலில் அவலை நீரில் ஒருமுறை கழுவி, தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து, நீரை முழுவதுமாக வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய காளான், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மாங்காய் தூள், அவல் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கையால் பிசைய வேண்டும்.
அடுத்து சிறிது அவல் கலவையை எடுத்து உருட்டி, அதை கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
இதே போன்று அனைத்து மாவையும் கட்லெட்டாக தயார் செய்து, பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும், தட்டி வைத்துள்ள ஒரு கட்லெட்டை எடுத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான அவல் கட்லெட் தயார்.
மேலும் படிக்க
Pallipalayam Mushroom Fry: புரதச்சத்து நிறைந்த காளான்.. பள்ளிப்பாளையம் காளான் வறுவல் செய்முறை இதோ..
Sugar Cane Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான கரும்பு பாயாசம் செய்முறை இதோ
Cashew Chutney: முந்திரி சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை தெரிஞ்சுகோங்க மக்களே..