Palak Paneer Uttapam: தோசை பிரியர்களே- பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெசிபி இதோ!
பாலக் பனீர் ஊத்தாப்பம் செய்வது எப்படி என்று காணலாம்.
தோசை பிரியர்களுக்கு பிடித்தமான பாலக் பனீர் ஊத்தாப்பம் எப்படி செய்வது என காணலாம். பனீர், பாலக்கீரை என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தப்பத்தை காலை உணவாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை - ஒரு கப்
ரவா - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
பனீர் துருவியது - ஒரு கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராவா, தயிர், உப்பு, அரைத்த பாலக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் அகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெடி,. இதற்கு வேர்க்கடலை, தேங்காய், தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
எடை குறைப்புக்கு பனீர் நல்லதா என்று கேட்டால் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது. பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு. அந்த குணம் பனீருக்கும் உண்டு. இதனால் அதிக்கப்படியாக உணவு உண்ணும் எண்ணத்தைத் தடுக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.அது சரி, பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால், இந்த உணவு எப்படி ஆரோக்கியமானது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். எதையுமே ஆரோக்கியமான முறையில் சமைக்கும்போது ஹே
ஹெல்தி சில்லி பனீர் ரெசிபி
ஹெல்தி சில்லி பனீர் செய்முறை
முதலில் பனீர் துண்டுகளை நெய்யில் வறுக்கவும். அதை ஒரு புறம் வைத்துவிட்டு பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை சிறிது நெய்யில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் வதக்கவும். இதனுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து வெங்காயம் மற்றும் குடைமிளகாய் மென்மையாகும் வரை வதக்கவும். பரிமாறும் முன் பனீர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்படுபவர்கள் இதில் சாட் மசாலா சேர்க்கலாம்.
கடாய் பனீர் ரெசிபி
ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கடாய் பனீர் ரெடி.