நீர் காய்கறிகளை எப்படி சமைக்கணும் தெரியுமா? செள செள முதல் புடலங்காய் வரை..
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவான சௌசௌ கறி சுவை குறித்து பத்ம லக்ஷ்மி பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம லக்ஷ்மி ஒரு பிரபல எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த சமையல் கலைஞரும் கூட. அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் பத்மலட்சுமி பன்முகத்தன்மைகொண்ட ஒரு பெண்ணாக திகழ்கிறார்.
எழுத்தாளர், சமையல் கலைஞர்,நிகழ்ச்சி தயாரிப்பாளர், சமூக செயல்பாட்டாளர் என இவருக்கு பல முகங்கள் உள்ளன. இவர் தனது ஓய்வு நேரங்களில் வீட்டில் இருக்கும்போது தான் ருசித்த மற்றும் அனுபவத்தில் கண்ட சமையல் குறிப்புகளை செய்முறையுடன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் சௌசௌ கறி குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றபடியால், தான் சிறு வயது முதல் சௌசௌ கறி சாப்பிட்டதையும் அதன் சுவை குறித்தும் அதில் பதிவிட்டு இருக்கிறார்.
சாயோட் என்றும் அழைக்கப்படும் சௌசௌ கறி செய்ய என்னென்ன தேவையென பார்க்கலாம். அவரது செய்முறையின்படி சௌசௌ கறி செய்ய, சமையலறையில், தக்காளி, வெங்காயம் மற்றும் இஞ்சி இருந்தாலே போதுமென அவர் கூறியுள்ளார். பத்மலக்ஷ்மி அடிக்கடி, தான் சாப்பிட்டு வளர்ந்த இந்திய உணவுகள் குறித்து தனது ரசிகர்களுக்கு வீடியோக்கள் மூலம் பதிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரபலமான சமையல்காரர்,முன்னாள் மாடலான பத்ம லட்சுமி, சமையல் போட்டி நிகழ்ச்சியான 'டாப் செஃப்' சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் 2009 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் சிறந்த ரியாலிட்டி ஹோஸ்டுக்கான எம்மி விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.
அவரது சமீபத்திய தென்னிந்திய உணவான 'சௌ சௌ கறி' குறித்த சமையல் வீடியோ வைரல் ஆகி வருகிறது. சௌசௌ என்பது தென்னிந்தியாவை பொறுத்த அளவில் சாம்பாரில் சேர்க்கப்படும் ஒரு காய்கறியாகும். பிரபல எழுத்தாளரான பத்மலட்சுமி தனது மகளுடன் சேர்ந்து சௌசௌ கறி செய்து, இரவு நேர சாப்பாட்டுக்கு உணவுகளை தயாரிப்பது குறித்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சோறு மற்றும் பருப்புடன் , பரோட்டா அல்லது சப்பாத்தி செய்து அதனுடன் இந்த வறுத்த சௌசௌ கறியை சாப்பிடுவது மிகவும் சுவையானது என அவர் பதிவிட்டுள்ளார். சௌசௌ வறுவல் செய்யும் முறையை பார்க்கலாம்:
முதலில் ஒரு சௌசௌ காய் எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் தக்காளியையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு கடாயை சூடாக்கி, சீரகம் மற்றும் கடுகு ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாக்களை சேர்க்கலாம். அத்துடன் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.
சுவைக்காக மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும்.
பின்னர் தேவைப்பட்டால் சிறிய அளவாக தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்கும் வரை 4-5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தொடர்ந்து சௌசௌ கறியை திறந்து நன்கு கிளறி விடவும். தற்போது நறுமணமிக்க உணவு பரிமாற தயாராக இருக்கும்.
இதனை சப்பாத்தியில் ஸ்டஃப் செய்தோ அல்லது ரொட்டியுடன் தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம். இதே முறையை நீர்க்காய்களுக்கும் பயன்படுத்தலாம்