(Source: ECI/ABP News/ABP Majha)
Mango Malai Toast: சுவையான ஸ்நாக்ஸ் ஐடியா; மாம்பழ மலாய் டோஸ்ட் : எப்படி செய்வது?
Mango Malai Toast: குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சில பிரெட் ரெசிபி வகைகளை காணலாம்,
பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும்; அதிக நேரம் எடுக்காமல் என்ன செய்து கொடுக்கலாம் என்று திட்டமிடுறீங்களா? இதோ இந்த பிரெட் ரெசிபி உங்களுக்கு உதவலாம்.கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். இருப்பினும், அடிக்கடி பிரெட் சாப்பிட வேண்டாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலாய் மாம்பழ பிரெட் டோஸ்ட்:
என்னென்ன தேவை?
பிரெட் - ஒரு பாக்கெட்
மாம்பழம் - 3
ஃப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை - சிறிதளவு
கன்டன்ஸ்டு மில்க் - தேவையான அளவு
செய்முறை:
மாம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நன்றாக பழுத்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்கவும். மிக்ஸியில் ஏலக்காய் சர்க்கரை ஒரு க்ரைண்ட் செய்து எடுத்துகொள்ளவும்.
இப்போது தோசை கல்லில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுக்கவும். பிரெட் பொன்னிறமாக மாறியதும் அதன் ஒருபுறம் ப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். தேவையான பிரெட் துண்டுகளை ஃப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவேண்டும்.
இப்போது பிரெட் மீது ப்ரெஷ் க்ரீம் தடவி அதன் மீது ஏலக்காய் பொடி, சர்க்கரை தூவி மாம்பழ துண்டுகளை வைக்கவும். அதன் மீது கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். அவ்வளவுதான் எளிதான மாம்பழ டோஸ்ட் தயார்.
க்ரீமி பனீர் டோஸ்ட்:
என்னென்ன தேவை?
பிரெட் - தேவையான அளவு
பனீர் - ஒரு கப்
ப்ரெஷ் க்ரீன் - ஒரு கப் (250 கிராம்)
வெண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
சோயா சாஸ், Schezwan sauce - 1 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - ஒரு ஸ்பூன்
தண்ணீர்- சிறிதளவு
செய்முறை:
முதலில் பனீர் கிரேவி தயாரிக்கலாம். கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து கூட வெங்காயத்தை வதக்கலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும். இதோடு சோயா சாஸ்,Schezwan சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். இதோடு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்க வேண்டும். உப்பும் சேர்த்து அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.இதை நன்றாக கொதித்ததும், பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்களுக்குப் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். ஸ்டஃபிங்க் ரெடி.
டோஸ்ட் தயாரிக்க:
அடுத்து பிரெட்களை வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுத்துகொள்ளவும். இப்போது சூடா பிரெட் மீது பனீர் துண்டுகளை வைத்து கொத்தமல்லி தூவினால் க்ரீமி பனீர் டோஸ்ட் ரெடி.
பிரெட் வைத்து ஏராளமான உணவுகளை செய்யலாம். ஃப்ரெஞ்ச் டோஸ்ட், ப்ரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளையும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இதே செய்முறையில் பூண்டு, முட்டை வைத்து பிரெட் டோஸ் செய்யலாம். அதற்கு ஒரு கப் அளவிற்கு பூண்டை சில்லி ஃப்ளேக்ஸ் உடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் பேக் செய்தும் பயன்படுத்தலாம். இதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் கலவை தயாரானதும் ஆம்லெட் செய்ய வேண்டும். பின்னர், பிரெட் டோஸ்ட் செய்து அதன் மீது பூண்டை மசித்து வைக்கவும். அதோடு ஆம்லெட் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சில்லி ஃபேக்ஸ் உடன் தேன் சேர்த்து செய்தால் காரம், இனிப்பு இரண்டும் சேர்த்து இருக்கும். குழந்தைகளுக்கு அதிக காரம் பிடிக்காது என்றால் சில்லி ஃப்ளேக்ஸை குறைவாக சேர்க்கவும்.