Murungai Keerai Soup: இரும்புச் சத்தை அள்ளித்தரும் முருங்கைக் கீரை சூப்.. ஹோட்டல் சுவையில் செய்ய ரெசிபி இதோ..
ரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்றவாறு வீட்டிலேயே சுலபமாக முருங்கை கீரை சூப் செய்வது எப்படி என பார்க்கலாம்.
முருங்கை கீரையில் பொதுவாக சத்துக்கள் நிறைந்து உள்ளது. முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஏ,சி, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளது. எனவே இவற்றை நாம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தற்போது மழைக்காலம் என்பதால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியாவர்களை வரை அனைவருக்குமே இதனை சமைத்து கொடுக்கலாம்.
முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் இருக்கு சேதத்தை தடுக்க உதவி. மன அழுத்தம், வீக்கங்களை (inflammation) கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது. உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது. ஆனால் சில குழந்தைகள் கீரை என்றாலே முகம் சுளிப்பார்கள். அவர்களுக்கு ஏற்றது போல் ஹோட்டல் ஸ்டைலில் முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
- முருங்கைக் கீரை
- வெண்ணெய்
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- உப்பு
- மஞ்சள் தூள்
- மிளகு தூள்
- தேவையான தண்ணீர்
- சீரகம்
முருங்கைக் கீரை சூப் செய்முறை:
முதலில் முருங்கைக் கீரையை காம்புகள் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரி குக்கரில் 2 டேபில்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெண்ணெய் உருகிய பின் அதில் சீரகம் மற்றும் நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசனை போன பின் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே வதங்கிய பின் தக்காளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு மசியும் அளவு நன்கு வதக்க வேண்டும். பின் சுத்தம் செய்த முருங்கைக் கீரை சேர்த்து மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதங்கிய பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
பின் குக்கரின் ப்ரஷர் முற்றிலுமாக இறங்கிய பின் அதில் இருக்கும் தண்ணீர் தனியாக வடிகட்ட வேண்டும். 1 ½ வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் வடிகட்டிய சூப் தண்ணீரை சாதம் அல்லது சூப்பாக கொடுக்கலாம். இல்லையென்றால் வடிக்கட்டிய பின் அந்த முருங்கை கீரை, வெங்காயம், தக்காளி கலவையை மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையை வடிகட்டிய சூப் தண்ணீரில் சேர்த்து கொடுக்கலாம்.
மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளி தொல்லை இருக்கும். அந்த சமயத்தில் இந்த சூப் செய்து கொடுக்கலா. சூடான சூப்பில் மிளகு தூள் சேர்த்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கு. இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சிறந்த உணவு முருங்கைக்கீரை.
Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!