News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Fish Nirvaana: சுவைமிக்க மீன் நிர்வானா.. நாவில் எச்சில் ஊரும் சுவையில் சுலபமாக செய்வது எப்படி? ரெசிபி உங்களுக்காக..

மீன் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். அதிலும் தேங்காய் பால் சேர்த்து மீன் நிர்வானா என்றால் அலாதி ருசி. எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

அசைவ உணவில் தவிர்க்க முடியாத ஒன்று என்றால் மீன் தான். மீன் என்றால் எல்லோருக்கும் பிடித்தமான உணவாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உகந்த உணவு என்றும் சொல்லலாம். மீனில் யஃபேட்டி ஆசிட், ஒமேகா 3 அகிய சத்துக்கள் நிறைந்து உள்ளது. மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்து கிடைப்பதாகவும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 

அப்படி மீன் சாப்பிடுபவர்கள் மீன் குழம்பு, மீன் புட்டு, மீன் வறுவல், மீன் பிரியாணி என பல விதமாக சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வகியில் மீன் நிர்வானா ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள். அதன் சுவையே தனி. பெயர் வித்தியாசமாக இருப்பதால் செய்வதற்கு கடினமாக இருக்குமோ என்று நினைக்கலா. ஆனால் இந்த உணவு 30 நிமிடத்திற்குள் சமைத்து முடித்துவிடலா. 

மீன் நிர்வானா செய்ய தேவையான பொருட்கள்: 

  • வவ்வால் அல்லது வேறு ஏதேனும் ஒரு மீன்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எலுமிச்சைபழம்
  • தேங்காய் எண்ணேய்
  • வாழை இலை
  • தேங்காய் பால்
  • கறிவேப்பிள்ளை
  • இஞ்சி
  • மாங்காய்
  • பச்சை மிளகாய் 
  • மிளகு தூள்

மீன் நிர்வானா செய்முறை:

முதலில் நீங்கள் எடுத்துக்கொண்ட மீனை நன்றாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து மேரினேட் செய்ய வேண்டும். 10 நிமிடத்திற்கு பின் ஒரு பேனில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மேரினேட் செய்த மீனை வறுக்க வேண்டும். மிகவும் மொறு மொறு என்று இல்லாமல் அதாவது டீப் ஃப்ரை இல்லாமல் ஷாலோ ஃப்ரை செய்ய வேண்டும். மீன் வெந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு மண் சட்டியில் (மண் சட்டி உகந்தது - மண் சட்டி இல்லையென்றால் கடாய் எடுத்துக் கொள்ளலாம்) நெருப்பில் லேசாக வாட்டிய வாழை இலையை வைக்க வேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து லேசாக சூடானதும் அதில் கறிவேப்பிள்ளை மற்றும் மீன் வைக்க வேண்டும். வாழை இலையில் மீன் சவைத்த பிறகு அதில் முதல் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு இஞ்சி, தேவையான அளவு உப்பு (ஏற்கனவே மீனில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளது அதேபோல் தேங்காய் பாலிலும் உப்பு சுவை இருக்கும் என்பதால் உப்பின் அளவு பார்த்து சேர்க்க வேண்டும்), மாங்காய் துண்டுகள், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்க்க வேண்டும். சிறிய தீயில் வைத்து சமைக்க வேண்டும். வாழை இலைக்கு மேல் இருக்கும் இந்த கலவை கொதொ வந்தவுடன் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாரினால் அடடா அப்படி ஒரு சுவை இருக்கும். 

Published at : 09 Oct 2023 01:49 PM (IST) Tags: fish recipe fish nirvana kerala fish recipe

தொடர்புடைய செய்திகள்

Creamy Mushroom Toastie: சுவையான மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ!

Creamy Mushroom Toastie: சுவையான மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ!

Herbal Tea: டீ குடிக்கும் பழக்கத்தை குறைக்கணுமா? இந்த ஹெர்பல் டீ வகைகள் டயட்டில் இருக்கட்டும்!

Herbal Tea: டீ குடிக்கும் பழக்கத்தை குறைக்கணுமா? இந்த ஹெர்பல் டீ வகைகள் டயட்டில் இருக்கட்டும்!

Pasta Recipe: உடல் எடை அதிகரிக்க கூடாது; சுவையான பாஸ்தா சாப்பிடணும் - இப்டி செய்து பாருங்க!

Pasta Recipe: உடல் எடை அதிகரிக்க கூடாது; சுவையான பாஸ்தா சாப்பிடணும் - இப்டி செய்து பாருங்க!

No-Bake Blueberry Cheesecake: கேக் சாப்பிட ஆசையா? எளிதாக செய்யலாம் - சீஸ் கேக் ரெசிபி இதோ!

No-Bake Blueberry Cheesecake: கேக் சாப்பிட ஆசையா? எளிதாக செய்யலாம் - சீஸ் கேக் ரெசிபி இதோ!

Mutta Idli : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன முட்டை இட்லி ரெசிப்பி.. 10 நிமிஷத்துல..

Mutta Idli : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன முட்டை இட்லி ரெசிப்பி.. 10 நிமிஷத்துல..

டாப் நியூஸ்

ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!

ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!

ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!

ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!

Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?