News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

மொறு மொறு தோசை வேணுமா? அப்போ மாவை இப்படி அரையுங்கள்!

முறுகல் தோசை சிறுசு முதல் பெருசு வரை எல்லோருக்கும் ஆல்டைம் ஃபேவரைட் உணவு. ஆனால் அப்படியொரு நல்ல முறுகல் தோசை சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு பெரும்பாலும் ஹோட்டலைத் தான் நாட விடியதாக உள்ளது.

FOLLOW US: 
Share:

முறுகல் தோசை சிறுசு முதல் பெருசு வரை எல்லோருக்கும் ஆல்டைம் ஃபேவரைட் உணவு. ஆனால் அப்படியொரு நல்ல முறுகல் தோசை சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு பெரும்பாலும் ஹோட்டலைத் தான் நாட விடியதாக உள்ளது.

அப்படி என்னதான் அந்த மாவில் கலக்கிறார்கள் என்று நாம் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொள்வதும் உண்டு. அது ஒன்றும் சிதம்பர ரகசியம் எல்லாம் இல்லீங்க 4 ஈஸி ஸ்ட்பெஸ் ஃபாலோ பண்ணா போதும், கடை தோசை மாவு பதத்தில் மாவு ரெடியாகிவிடும்.

ஸ்டெப் 1 – சரியாக கழுவுதல்

*ஒரு பாத்திரத்தில்’ 2.5 கப் இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளவும். அத்துடன்1/2 கப் பச்சை அரிசி எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து குறைந்தது 3 முறையாவது கழுவவும். இதனால் தூசி, அழுக்கு எல்லாம் கலையப்படும்.

*மற்றொரு பாத்திரத்தில்1/2 கப் உளுத்தம் பருப்பு, -1/2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்து ஒன்றாகக் கழுவவும். 

மேலே குறிப்பிட்டுள்ளபடி அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் பலமுறை கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2 – சரியாக ஊறவைக்கவும்

கழுவுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஊறவைப்பதும் மிகவும் முக்கியம்.

* கழுவிய அரிசி கலவையை 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

* வெந்தயத்துடன் கழுவிய உளுந்தை 1.5 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

முக்கிய குறிப்பு: நீங்கள் அரிசி மற்றும் பருப்புகளை ஊறவைக்கும் போது, ​​ அவை தண்ணீரில் தெளிவாக தெரிய வேண்டும். அவ்வாறாகத் தெரிந்தால் தான் நீங்கள் நன்றாகக் கழுவி உள்ளீர்கள் என்று அர்த்தம்.

* இப்போது, ஒரு இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 4-5 மணி நேரமாவது அரிசி, பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும்.

ஸ்டெப் 3- சரியாக அரைக்கவும்

* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி அவற்றை அரைக்கவும்.

குறிப்பு: மாவை அரைக்க 2.5 கப் தண்ணீர் (இதில் ஊறவைத்த நீரும் அடங்கும்). தண்ணீர் அளவு மாறிவிட்டால் நிச்சயமாக தோசை பதமாக வராது. ஆனால் அதேவேளையில் சில அரிசியின் தரத்தைப் பொறுத்து தண்ணீரின் தேவையும் சிறிது மாறுபடும். அதனால் அரைக்கும் போது தண்ணீர் தேவையைப் பார்த்து ஊற்றிக் கொள்ளவும்.

ஸ்டெப் 4- சரியாக கலக்கவும்

* அரைத்த உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும்.

*உப்பு – 1.5 டீஸ்பூன் (தேவைப்பட்டால் நீங்கள் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்) மற்றும் 2 தேக்கரண்டி எள் எண்ணெய்(sesame oil) சேர்க்கவும். (எள் எண்ணெய் சேர்ப்பது தோசையின் சுவையை அதிகரிக்கும்)

* குறைந்தது 3-4 நிமிடங்களுக்கு உங்கள் கையால் மாவை கலக்கவும்.

* நீங்கள் நன்கு கலந்தவுடன், மூடி’ 6-8 மணி நேரம் அப்படியே வைக்கவும். குளிர்ந்த கால நிலையில் இது அதிக நேரம் எடுக்கும்.

குளிர்காலத்தில்மாவு பாத்திரத்தை முழுவதுமாக ஒரு ஸ்டோல் அல்லது சால்வையால் மூடி வைக்கலாம்

“மிருதுவான பேப்பர் ரோஸ்ட் தோசை செய்ய மாவுடன் சிறிது நீர் சேர்க்கலாம்” 

ட்ரை பண்ணி பாருங்க.

Published at : 23 Feb 2022 12:38 PM (IST) Tags: Dosa batter How to make dough batter for Dosa hotel style dosa

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?