ஸ்பைஸி சீஸி பனீர் ஃப்ராங்கி... வீட்டிலேயே ஆரோக்கியமாகச் செய்வது எப்படி?
சீன உணவுக்கு என்று இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனாலேயே தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் சீன உணவுத் தயாரிப்புக் கூடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
சீன உணவுக்கு என்று இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனாலேயே தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் சீன உணவுத் தயாரிப்புக் கூடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
அடிக்கடி ஸ்விக்கி சோமாட்டோக்களில் சீன உணவு ஆர்டர் செய்பவர்களும் நம்மிடையே உண்டு. ஆனால் அப்படி அடிக்கடி சாப்பிடலாமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் தாராளமாகச் சாப்பிடலாம் என்பதுதான் உண்மை. நூடுல்ஸ், சில்லி சிக்கன் மற்றும் சில்லி பனீர் என்பது பொதுவாக அனைவரின் ஆர்டர் சாய்ஸாக உள்ளது.ஆனால் எடைக்குறைப்பு நடவடிக்கையில் இருக்கும் ஒருவர் இதனை உண்ணலாமா? நிச்சயம் இதுபோன்ற உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்கிற எண்ணம் ஏற்படும். இருப்பினும் அதன் சுவைக்கு நாவைக் கட்டுப்படுத்தவும் முடியாது... என்னதான் செய்யலாம்? நீங்கள் எடைகுறைக்க முயற்சி செய்பவர் என்றால் உங்களுக்கு ஏற்ப ஆரோக்கியமான முறையில் இதனை தயார் செய்யலாம் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.
அந்த வரிசையில் சில்லி பனீர் ஃபிராங்கி என்பது கிளாசிக் இந்தியன் ஸ்ட்ரீட் ஃபுட் வகையில் ஒரு எவர்க்ரீன் எனச் சொல்லலாம். ஃபிராங்கி பொதுவாக காரமான உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், க்ரீன் சட்னி மற்றும் சீஸ் ஆகியவற்றால் ஃபில்லிங் செய்து உருவாக்கப்படுவது, இது பல மெட்ரோ நகரங்களில் ஒரு உடனடி உணவாக விரும்பிச் சாப்பிடப்படுகிறது. சில்லி பனீர் ஃபிராங்கி செய்ய அதற்கான தனித்துவமான மசாலா ஃபில்லிங்கை செய்து உருவாக்க வேண்டும். நமது நாவின் காரத் தேவைக்கு ஏற்றபடி இதற்கான மசாலாவை உருவாக்கலாம்.
அதற்கான செய்முறை
சில்லி பனீர் ஃபிராங்கியை உருவாக்க, ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து ஃப்ராங்கி மசாலாவைத் தயாரிக்க வேண்டும்..அதற்கு , கார்ன்ஃப்ளார், மைதா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்து பேஸ்ட்டாகத் தயாரிக்கவும். அதில் பனீரை க்யூப்ஸாக வெட்டி, அதனுடன் சேர்க்கவும்..இதனைச் சிறிது நேரம் மேரினேட் செய்து பிறகு லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இந்த ஸ்டஃப்பிங்கை தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து, ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா சிறிது அளவு, முழு கோதுமை மாவு, உப்பு, தயிர் மற்றும் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, தண்ணீர் சேர்த்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தில் உள்ள இதனை ஆறு சம பாகங்களாகப் பிரித்து, சப்பாத்திக்கான தயாரிப்பு போலவே உருண்டைகளாக உருட்டி மெலிதாக இடவும்..பின்னர் சூடான தவாவில் இதனை போட்டு இருபுறமும் நன்கு வேகும்வரை வாட்டி எடுக்கவும். இதனுள் தற்போது பனீர் ஸ்டஃபிங்கை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.
சுவையான பனீர் ஃப்ராங்கி ரெடி!