Kadala Curry : தேங்காய் எண்ணெய்.. ப்ரோட்டீன்.. கேரளா ஸ்டைல் கடலை கறி இவ்வளவு நல்லதா? இப்படி பண்ணுங்க..
கேரள உணவு என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பரோட்டா ஃபீஃப் கறி, புட்டு கடலைக்கறி. சுவை மிகுந்த கடலைக்கறி செய்வது எப்படி என்று பார்ப்போமா?
கேரள உணவு என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பரோட்டா ஃபீஃப் கறி, புட்டு கடலைக்கறி. கேரள உணவகங்களிலும் இவை கிடைக்கும். காலையில் சுடச்சுட புட்டு, கடலைக்கறி, இல்லை புட்டு வாழைப்பழம் அப்பளம், இவற்றுடன் ஒரு கட்டன் சாயா..அதாங்க பிளாக் டீ சாப்பிட்டோம் என்றால் ஆஹா ... அனுபவிச்சுப் பாருங்கள்.
சுவை மிகுந்த கடலைக்கறி செய்வது எப்படி என்று பார்ப்போமா?
கடலைக்கறி செய்வது எப்படி என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டக்கடலை 1 கப்
நறுக்கிய வெங்காயம் 1 கப்
நறுக்கிய தக்காளி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தாளிக்க
கடுகு 1 தேக்கரண்டி
செய்முறை:
கொண்டக்கடலை முந்தைய நாள் இரவே ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
குக்கரில் 2 விசில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்
தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் நைசாக அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் கொண்டக்கடலை அரைத்த விழுது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பின் மல்லி இலை தூவி இறக்கவும்.
கடலைக்கறி ரெசிபி ரொம்பவே சிம்பிள் தான். ஆனால் இதன் சிறப்பு என்னவென்றால் இதன் மனமும் சுவையும். இதுவரை தென்னிந்திய உணவு சாப்பிட்டதில்லை என்பவர்கள் முதன்முதலில் கடலைக்கறியை சுவைத்தால் போது அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
கடலைக்கறியின் ஆரோக்கிய பயன்கள் என்னென்ன?
கருப்பு சுண்டலில் புரதம் நிறைய இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்துடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே உடலைக் கட்டமைப்பதில் மிகவும் முக்கியமானவை. கருப்பு சுண்டலில் இருக்கும் பொட்டாசியம் மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகம். இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். இத்துடன் கருப்பு சுண்டலில் இரும்புச் சத்தும் நிறைவாக இருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக உடல் நலத்துக்கு சிறந்தது.
இத்தனை நன்மைகள் நிறைந்த உணவை, இவ்வளவு எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும் என்றால் மிஸ் பண்ணலாமா? கடல்கடந்த கான்டினென்டல் உணவையெல்லாம் விட்டுத்தள்ளுங்க உள்நாட்டிலேயே நமது ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற ஸ்பெஷல் உணவுவகைகள் உள்ளன. அவற்றை வீட்டிலேயே செய்து பாருங்கள். சுவைத்து, மகிழுங்கள். பன்முகத்தன்மை நிறைந்த நம் நாட்டில் பல்சுவை உணவுக்கு மட்டும் பஞ்சம் இருக்கப்போகிறதா என்ன? இது போன்ற வெளிமாநில உணவுகளையும் அதன் செய்முறையையும் அடுத்தடுத்து நிறைய பார்ப்க்கலாம். ஈஸி ரெஸிபிகள் மூலம் செய்து மகிழலாம்.