Foxtail Millet Pulao: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தினை ரெசிபி! இப்படி செஞ்சு அசத்துங்க!
ஆரோக்கியமான தினை புலாவ் எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை பயக்க கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அதிலும் தினை விசேஷமானது. இதில் அதிக நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வைட்டமின்கள் உள்ளன.
தினையில் தயாரிக்கப்படும் உணவுகள் சுவை மிகுந்ததாக இருக்கும். இதில் சுவையான புலாவ் செய்யலாம். நம்மில் பெரும்பாலானோர் புலாவை பாசுமதி அரிசியில் செய்வோம். இதற்கு மாற்றாக தினையில் புலாவ் செய்தால் நாம் சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். வாங்க தினையில் எப்படி புலாவ் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் தினை, 2 கப் தண்ணீர், 2 டீஸ்பூன் எண்ணெய், 1 வெங்காயம் நறுக்கியது, 2 பூண்டு பற்கள் நறுக்கியது, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி தனியா தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 கப் காய்கறிகள் (கேரட், பட்டாணி மற்றும் குடை மிளகாய் போன்ற காய்கறிகள்) நறுக்கியது, சுவைக்கேற்ப உப்பு, 1/4 கப் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது.
செய்முறை
1.தினையை கழுவி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
2.தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த தினைய தனியாக வைக்கவும்.
3.ஒரு கடாயில், மிதமான தீயில் எண்ணெயை சூடாக்கவும்.
4. எண்ணெயில் சீரக விதைகளைச் சேர்த்து, அவற்றை ஒரு சில நிமிடம் வறுக்க வேண்டும்.
5.நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
6.தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7.நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
8.ஊறவைத்த தினை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
9.2 கப் தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
10.நன்றாக கலந்து ஒரு மூடி கொண்டு கடாயை மூடி.11.15-20 நிமிடங்கள் அல்லது ஃபாக்ஸ்டெயில் தினை மென்மையாகி, தண்ணீர் உறிஞ்சப்படும் வரை வேக வைக்க வேண்டும்.
12. அவ்வளவுதான் சுவையான தினை புலாவ் தயாராகி விட்டது. இதை நறுக்கிய ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறலாம்.
13.புலாவின் மேல் வறுத்த முந்திரி அல்லது பாதாம் பருப்புகளைச் சேர்க்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மேலும் சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும்.
மேலும் படிக்க
உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும்: ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
Mahua Moitra: என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது: மஹூவா மொய்த்ரா எம்.பி. ஆவேசம்