Herbal Tea: டீ குடிக்கும் பழக்கத்தை குறைக்கணுமா? இந்த ஹெர்பல் டீ வகைகள் டயட்டில் இருக்கட்டும்!
Herbal Tea: உடல் நலனை பாதுகாக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
நம் அன்றாடம் என்ன சாப்பிடுகிறோம் என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ’என்ன உணவு உண்கிறோமோ அதுதான் நாம்’ என்று சொல்லப்படுவதுண்டு. மாறிவரும் சூழலுக்குக்கேற்ப நம் டயட்டில் பல உணவுகள் இணைந்துவிட்டன. அது ஆரோக்கியமுடன் இருந்தால் நன்மையே. ஒரு நாளில் அதிக முறை டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஹெர்பல் டீக்கு மாறலாம். வீட்டில் உள்ள பொருட்களில் டீ செய்து குடிக்கலாம்.
ஹெர்பல் டீ குடல் ஆரோக்கிய பாதிப்பில் இருந்து மீளவும், அதன் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடலில் ஹார்மோன் சீரின்மையால் ஏற்படும் மாற்றங்களை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சரிசெய்யலாம். அதற்கு ஹெர்பல் டீ-யும் நன்கு உதவும்.
புதினா டீ:
புதினா டீ ஏற்படும் ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது. இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்த்து குடிக்கலாம்.
கிரீன் டீ:
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. பி.சி.ஓ.எஸ்., அறிகுறிகள் இருப்பவர்களும், உடல் எடை அதிகரிக்கிறது என்று நினைப்பவர்களும் இதை அருந்தலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க கிரீன் டீ-யை டயட்டில் சேர்ப்பது நல்ல பலன் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
இஞ்சி டீ:
சமையலில் சிறிதளவு இஞ்சி சேர்க்கப்படுவது செரிமானத்திற்கு உதவும் என்பதால். அதே நேரம் இஞ்சியில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவும். உடலில் ஈஸ்டோரெஜன் அளவை சீராக்க இந்த இஞ்சி டீ உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி- இன்ஃபேலேமேட்ரி திறன் உடல் வலி, தலைவலி உள்ளிட்டவைகள் வராமல் தடுக்கிறது. காலை அல்லது மாலை என எப்போது வேண்டுமாலும் இஞ்சி டீ குடிக்கலாம். இதோடு எலும்பிச்சை மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம். சோம்பு சேர்த்தும் இஞ்சி டீ குடிக்கலாம்.
அதிமதுரம் டீ:
அதிமதுரத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அது பி.சி.ஓ.எஸ்.-க்கு எப்படி உதவுகிறது என்றால், உடலில் டெஸ்டோரெசன் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், அதிமதுர டீ குடிப்பதால், எதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்கலாம்.
லவங்க பட்டை டீ:
லவங்கப்பட்டை டீ, இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை சேர்வதை குறைக்கிறது. இது குறைந்த கலோரி என்பதாலும், தினமும் இரண்டு முறை இந்த டீ குடிக்கலாம்.
கெமோமைல் டீ:
கெமோமைல் டீ குடல் செயல்பாடுகளை சீராக இருக்க உதவும். அதோடு, நரம்பு மண்டலத்தை Calm செய்யும். கெமோமில் டீ பெரும்பாலும் மன அழுத்தத்தை குறைக்கும். ஏனெனில் இது உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்கிறனர்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.