Health: எடைக்குறைப்பு முதல் இரத்த அழுத்தம் வரை உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கு..!
இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல உணவாக அமைகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கிலுள்ள நார்ச்சத்தை நம் உடல் மெதுவாக ஜீரணிப்பதால், உடனடியாக பசியைத் தூண்டாது. இதனால் உடல் எடை குறைகிறது.
உடல் எடையை குறைக்க என்னன்னவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லையா? எடை குறைப்புக்கு உதவும் மகத்தான காய்கறி ஒன்று உள்ளது. தண்ணீர் விட்டான் கிழங்கு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மருத்துவ குணங்களுக்காகவே தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிரிடப்படும் கிழங்கு வகை தான் தண்ணீர் விட்டான் கிழங்கு.
உடல் எடைக் குறைப்பு மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய, தண்ணீர் விட்டான் கிழங்கு நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதோடு இரத்த உறைதல் மற்றும் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் K வைக் கொண்டுள்ளது. இதில் குரோமியம் இருப்பதால் சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குரோமியம், இரத்த ஓட்டத்தில் இருந்து உயிரணுக்களுக்கு குளுக்கோஸைக் கொண்டு செல்வதற்கு இன்சுலின் திறனை மேம்படுத்துவதற்குத் தேவைப்படுகிறது. இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எடை குறைப்பு
தண்ணீர் விட்டான் கிழங்கில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல உணவாக அமைகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கிலுள்ள நார்ச்சத்தை நம் உடல் மெதுவாக ஜீரணிப்பதால், உடனடியாக பசியைத் தூண்டாது. இதனால் உடல் எடைக் குறைகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
இதில் பொட்டாசியம் இருப்பதால் இதயம், எலும்புகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் அஸ்பாரகின் எனப்படும் கலவையையும் உள்ளது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கருவுறுதலை அதிகரிக்கிறது
கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் அவசியம். உடலில் ஃபோலிக் அமிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய, இது உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் கே மற்றும் ஃபோலிக் அமிலத்தை வழங்க தினமும் ஒரு கப் தண்ணீர் விட்டான் கிழங்கு போதுமானது. இதில் குளுதாதயோன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது பெண்கள் வயிற்றில் உள்ள முட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. அதன்மூலம் கருவுறுதல் எளிதாகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டுள்ளது
இது ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் குளுதாதயோன் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அடங்கும். எனவே, இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு இரத்த அழுத்தம், அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை குறைக்க உதவுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.