Asia Cup 2023: கொரோனாவால் திண்டாடும் இலங்கை அணி.. பின்னடைவை சந்திக்கும் நிலை.. நடைபெறுமா ஆசியக் கோப்பை..?
ஆசிய கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால், ஆசிய கோப்பையை நடத்தும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ளது.
2023 ஆசிய கோப்பை போட்டியானது இந்தாண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்குகிறது. ஆனால், தற்போது ஆசியக் கோப்பை போட்டியே நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
அதற்கு காரணம், ஆசிய கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால், ஆசிய கோப்பையை நடத்தும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ளது.
Ahead of the Asia Cup 2023, Sri Lanka batters Kusal Perera and Avishka Fernando tested positive for COVID-19. #SriLanka #LPL #LPL2023 #Lanka #AvishkaFernando #KusalPerera #COVID19 #CricketTwitter #AsiaCup2023 #MazaPlay pic.twitter.com/PWNiBiRT5z
— MazaPlay (@PlayMaza) August 25, 2023
இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசலா பெரேரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த வீரர்கள் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெறுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. தொடர்ந்து, இலங்கை மண்ணில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் ஒன்று ஆசியக் கோப்பை போட்டி தள்ளிபோகும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
அப்படி இல்லையென்றால், கொரோனா கால கட்டத்தில் தீவிர கண்காணிப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்றது போன்று, இலங்கை மண்ணில் பாதுகாப்பாக நடந்த உறுதி செய்யப்படும்.
Wanindu Hasaranga has been ruled out of the Asia Cup.
— Vishal Sharma (@Vishal_05610) August 25, 2023
Big blow for Sri Lanka#AsiaCup2023 #SriLanka pic.twitter.com/OjQkrevyim
முன்னதாக, இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹசரங்கா ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின்போது ஹசரங்கா காயம் அடைந்து இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. லீக் போட்டிகளின்போது காயம் ஏற்பட்டாலும் ஹசரங்க தொடர்ந்து விளையாடி அசத்தினார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் ஹசரங்கா பெற்றார். ஆனால் தற்போது ஹசரங்காவின் காயம் தீவிரமடைந்துள்ளது. அதேபோல், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா அணியை அனுப்ப மறுத்துவிட்டது. இதற்குப் பிறகு, ஹோஸ்டிங் தொடர்பான சர்ச்சை நீண்ட நேரம் தொடர்ந்தது. எனினும், பின்னர் பாகிஸ்தானுடன் இணைந்து நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட விளையாடாது. இறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.