Mushroom Recipe: ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான காளான்.. வீட்டிலே செய்வது ரொம்ப ஈசிதான்..!
ரோட்டுக்கடை ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி சுவையான காளான் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
ரோட்டுக்கடையில் கிடைக்கும் காளானை வாங்கி சாப்பிடும் போது இந்த சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். ஆனால் ஒருசிலர் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள்.
மற்றும் சிலருக்கு வெளியில் சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படும் என்ற அச்சத்தில் வெளியில் கடைகளில் சாப்பிட மாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் உங்களுக்காக தான் இந்த ரெசிபி. வீட்டிலேயே சுத்தமான எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி ரோட்டுக்கடை ஸ்டைலில் நீங்களே மஷ்ரூம் மசாலா செய்யலாம். வாங்க ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி களான் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 2 கப், காளான் - 2 கப், மைதா - 1 கப்,மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய்- வறுக்க தேவையான அளவு,சோள மாவு - 1/4 கப்
வதக்க தேவையான பொருட்கள்
வெங்காயம் - 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - 2, மஞ்சள் - 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்,கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - சிறிதளவு, சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் காளான், கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் உள்ளிட்ட மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் தேவையான அளவு எண்ணெய் காய வைத்து அதில் இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாய் வைத்து அதில் வதக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.
தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
மசாலா நன்கு மிக்ஸானதும், ஏற்கனவே பொரித்து எடுத்து வைத்துள்ள காளானை அதனுடன் சேர்த்து பிரட்ட வேண்டும். வறுத்த காளானை அப்படியே சேர்க்காமல் உடைத்து போட வேண்டும். அப்போது தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அவ்வளவு தான் ரோட்டுக்கடை ஸ்டையில் சூடான சுவையான காலான் ரெடி.
மேலும் படிக்க