(Source: ECI/ABP News/ABP Majha)
Dengue: டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி..? இதையெல்லாம் சாப்பிடுங்க...!
பப்பாளி இலைகள், துளசி, அஸ்வகந்தா, இஞ்சி, கற்றாழை, மாதுளை, தேங்காய் நீர், ஆரஞ்சு, மஞ்சள், வெந்தயம் உள்ளிட்டவை நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க கூடியது
தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது.
டெங்கு காய்ச்சல்:
கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் உணவுகள் குறித்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். பப்பாளி இலைகள், துளசி, அஸ்வகந்தா, இஞ்சி, கற்றாழை, மாதுளை, தேங்காய் நீர், ஆரஞ்சு, மஞ்சள், வெந்தயம் உள்ளிட்டவை நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க கூடிய பொருட்கள் என கூறப்படுகிறது.
1. பப்பாளி ஜுஸ்
பப்பாளியை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு சாறு, 3 டேபிள் ஸ்பூஸ் எலுமிச்சை சாறு, ஒரு டேபிஸ் ஸ்பூன் தேன், மிளகு தூள் மற்றும் சால்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
2. மூலிகை கலவை
நோய் பரவுவதை தடுக்க மூலிகை கலவை உதவும். துளசி, அஸ்வகந்தா, இஞ்சி, கற்றாழை, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை உடலுக்கு எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என ஊட்டச்சத்து பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர். நெல்லியில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க கூடியது.
3. மாதுளை
தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மாதுளை உடலுக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்க கூடியது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும் என்பதால், அவர்களுக்கு மாதுளை கொடுப்பது நல்ல ஆற்றலை கொடுக்கும். மாதுளையில் உள்ள இரும்பு சத்து இரத்த பிளேட்டுகளை அதிகரிக்க கூடியது.
4. தேங்காய் நீர்
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் நீரிழப்பு ஏற்படும். இதனால், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் நீரை எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலால் சில நேரம் குமட்டல் ஏற்படலாம். அதை தடுக்க இஞ்சி நீரை குடிக்கலாம்.
5. மஞ்சள்
மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், பாலுடன் மஞ்சள் கலந்து குடிக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்படுகிறது.
6.ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் மற்றும் விட்டமின் சி டெங்கு வைரஸ் வருதை தடுக்க உதவும் என கூறப்படுகிறது.
(பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.)