மேலும் அறிய

Health: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் ஐந்து உணவு வகைகள் உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது.

உயர்ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் ஐந்து உணவு வகைகள்
உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது.

ரத்த அழுத்தம்:

ரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் என்பது எப்போதுமே நம் ரத்த அழுத்தத்தின் அளவு 140/90 என்றளவில் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம் தனிப்பட்ட ஒரு நோயாக கவனம் பெறுவதைவிட அதனால் மாரடைப்பு ஏற்படலாம், பக்கவாதம் ஏற்படலாம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம் என்பதனால் அதிக கவனம் பெறுகிறது. உலகில் 113 கோடி மக்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம். அதிலும், இந்த நோயை ஐந்தில் ஒருவர்தான் சரியாக கவனிக்கின்றனர் என்றும், மீதமுள்ளோர் கடும் அபாயத்தில் உள்ளதாகவும் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.

சைலன்ட் கில்லர்:

இதில் இன்னொரு கவலை கொள்ளும் விஷயம் என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்படுகிறது. சரி, உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? என்று பார்ப்போம். 
அதிக மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை ஆகியனவையே உயர் ரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கின்றன. 

இந்த தவறான பழக்கவழக்கங்கள் கூடாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக உயர் ரத்த அழுத்த தினமானது மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் நிகழும் அகால மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 1.13 பில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கையாள்வது?

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையையும் மாற்றியமைப்பது முக்கியம். அதில் உங்கள் அன்றாட உணவுப் பழக்கங்களும் அடங்கும். அதேபோல் மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை கைவிடுவது சிறந்தது.

நிபுணர்கள் பலரும், உப்பைக் குறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பொட்டாசியம் சீராக உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக் கூடிய 5 உணவு வகைகளைப் பார்ப்போம்:

1. செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி தேநீரில் ஆந்தோசயனின் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கிறது. இது ரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கிறது. அதனால் செம்பருத்தி தேநீர் அருந்தலாம். 

2. பச்சைக் காய்கறிகள், கீரைகள்

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இதனால் இவை சோடியத்தின் எதிர்வினைகளை மட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. தக்காளி, உருளைக் கிழங்கு, பீட் ரூட், காளான், வெள்ளைப் பூண்டு, சக்கரவல்லிக் கிழங்கு ஆகியன சிறந்த உணவாக அமையும். பூண்டு ரத்த நாளங்களை ரிலாக்ஸ் ஆக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.  அதனால் அன்றாடம் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்,

3. பயறு மற்றும் பருப்பு வகைகள்

பீன்ஸ், தானியங்கள் மற்றும் பயறு வகைகள் புரதமும், நார்ச்சத்தும் நிறைந்தவை. அவற்றில் மற்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன. அதனால் அவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

 4. நட்ஸ்

உலர் கொட்டை வகைகளான பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவை பொட்டாசியம், மக்னீஸியம் ஆகியன நிறைந்தவை. இவையும், நட்ஸில் தாராளமாக உள்ள நார்ச்சத்து அனைத்துமே ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

5. முழு தானியங்கள்

ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் பீட்டா குளுகான், நார்ச்சத்து நிறைந்தவை. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நலனை பாதுகாக்கவும் உதவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget