Bhindi Masala: தாபா ஸ்டைல் பிந்தி மசாலா? ஈஸி ரெஸிபி
வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம்.
வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம்.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.
வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது.
இவையெல்லாம் வெண்டைக்காயின் நன்மைகளின் சில தான். இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட வெண்டைக்காயை கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு மசாலா செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - அரை கிலோ
தக்காளி 2 துண்டுகள்
வெங்காயம் 1
மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் கால் டீஸ்பூன்
கசூர் மேதி - அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு சுவைக்கு ஏற்ப
செய்முறை:
பிந்தி மசாலா செய்யும் முன்னர் வெண்டைக்காய்களை நன்றாக அலசிவிட்டு அதை காயவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இன்ச் அளவில் வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேனை எடுத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன்கள் எண்ணெய் ஊற்றவும். பின்னர் அதில் துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும். பின்னர் அதை நன்றாக வதக்கவும்.
பின்னர் வறுத்த வெண்டைக்காயை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெய்யில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதில் வெங்காய்ம் சேர்த்து வதக்கவும். அது வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின்னர் சிம்மில் வைக்கவும். இப்போது ஆம்சூர் பவுடர், சாட் மசாலா, கரம் மசாலா, கசூர் மேத்தி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதில் வெண்டைக்காயை சேர்க்கவும். பத்து நிமிடங்கள் பேனில் மூடி போட்டு சமைக்கவும். ரோட்டி, நான், பராத்தாவுக்கு பறிமாறலாம்