மேலும் அறிய
Advertisement
Chana Dal Kachori : சென்னா தால் கச்சோரி செய்யுறது இவ்ளோ ஈசியா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
சென்னா தால் கச்சோரி ஈசியாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
கச்சோரி ஒரு பிரபலமான ராஜஸ்தானி உணவாகும். சாஸ் உடன் வைத்து சாப்பிடும் போது இதன் சுவை மேலும் அலாதியானதாக இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட இது சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். இனி நீங்கள் கச்சோரி சாப்பிட விரும்பினால், கடைக்கு போக தேவையில்லை. வீட்டிலேயே செய்யலாம். சென்னா தால் கச்சோரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
சென்னா தால் கச்சோரி தேவையான பொருட்கள்
- 1/2 கப் சென்னா
- 1 கப் மைதா
- 1 டீஸ்பூன் நெய்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி தானியா தூள்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி சாட் மசாலா
- 1-2 பச்சை மிளகாய், நறுக்கியது
- 1 அங்குல இஞ்சி, நறுக்கியது
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- ஒரு சிட்டிகை கீல்(hing)
- உப்பு சுவைக்க
- தண்ணீர், தேவைக்கேற்ப
- எண்ணெய், தேவைக்கேற்ப
- முந்திரி பருப்புகள் (விரும்பினால்)
செய்முறை
1. கச்சோரி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். மாவு மிருதுவாக வரும் வரை பிசைய வேண்டும். இந்த பிசைந்த மாவை ஈரமான துணியால் மூடி வைக்கவும். இதை அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
2.இதற்கிடையில், சென்னா பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3.கச்சோரி பூரணத்தை தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து சூடாக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி சேர்க்கவும். சில நிமிடங்கள் இதை வதக்க வேண்டும். பின்னர் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, கீல் (hing) மற்றும் தானியா தூள் உட்பட அனைத்து உலர்ந்த மசாலாக்களையும் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விட்டு, சுமார் 5-7 நிமிடங்கள் இதை வேக விட வேண்டும்.
4. இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட வேண்டும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
5. இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவற்றை உருண்டைகளாக பிடிக்கவும். அவற்றை உருட்டி அதில் மசாலாவை ஸ்டஃப் செய்து அழகான வட்ட வடிவில் வடிவமைக்க வேண்டும்.
6. அவற்றை மெதுவாக எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான சென்னா தால் கச்சோரி தயார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion