News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Skin Winter Dryness: குளிர்காலத்தில் சரும வறட்சியால் அவதியா? கவலை வேண்டாம் - இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

வறண்ட சருமத்திற்கு எந்த உணவுகள் நல்லது?

ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க, போதுமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சரும ஆரோக்கியத்திற்கு, வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.

ஆரோக்கியமான அழகான சருமத்திற்கு தினமும் குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது, ​​குளிர்காலத்தில் வறண்ட மற்றும் மெல்லிய சருமத்தை எதிர்த்துப் போராட உதவும் உணவுப் பொருட்கள் குறித்துப் பார்க்கலாம்.

1. இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, தோல் பழுதுபார்ப்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளது.  இது குளிர்காலத்தின் கடுமையான விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. உங்கள் குளிர்கால உணவில் இதை சேர்த்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது. 

2. கொட்டைகள் மற்றும் விதைகள்

கொட்டைகள் மற்றும் விதைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால்  கொட்டை வகைகள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. கொட்டை வகைகளை தொடர்ந்து உட்கொள்வதால், தோல் செல் சேதத்தை சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது. மேலும் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி பாதாம், அக்ரூட் பருப்புகள் அல்லது சூரியகாந்தி விதைகள் விதைகளை உட்கொள்ளுதல் போதுமானது என சொல்லப்படுகிறது. 

3. பசலைக் கீரை

பருவகால உணவுகளில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், இரும்பு மற்றும் சருமத்திற்கு உகந்த வைட்டமின் ஈ உள்ளிட்டவை நிறைந்துள்ளன. கீரையில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி தோலை சீராக்கும் செயல்முறையைத் தொடங்கி பராமரிக்கிறது. கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீரேற்றம் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. 

4. அவகாடோஸ்

இந்த பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஊட்டச்சத்தை அளித்து, வறட்சியைத் தடுக்கும். அவகாடோஸ் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் அவை பெரும்பாலும் "இயற்கையின் வெண்ணெய்" என்று குறிப்பிடப்படுகின்றன. 

5. மீன்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மத்தி மீன் உள்ளிட்டவற்றில்  ஒமேகா -3 உள்ளது. மீனை வறுக்காமல் குழம்பாக செய்து சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி ஆகியவை பருவத்திற்கான சிறந்த தேர்வுகள் என சொல்லப்படுகிறது.

Published at : 25 Nov 2023 02:44 PM (IST) Tags: nuts Fish Life Style Sweet Potato Skin Winter Dryness

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?

Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?