Cooling Chutneys : வெயில் கொளுத்தி எடுக்குதா? இந்த சட்னிகளை ட்ரை பண்ணுங்க.. உடம்ப கூல் பண்ணுங்க..
தென்னிந்திய உணவு வகைகளில் டிஃபனுக்கு சட்னி இல்லாமல் இருப்பதில்லை. தேங்காய் சட்னி தொடங்கி கத்தரிக்காய், பீர்க்கங்காய் வரை சட்னி ரெஸிபிக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.
தென்னிந்திய உணவு வகைகளில் டிஃபனுக்கு சட்னி இல்லாமல் இருப்பதில்லை. தேங்காய் சட்னி தொடங்கி கத்தரிக்காய், பீர்க்கங்காய் வரை சட்னி ரெஸிபிக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. இந்நிலையில் கோடையில் குளிர்ச்சி தரும் சட்னி வகைகளைப் பார்ப்போமா? கோடையில் குளிர்ச்சி தரும் பழச்சாறு ரெஸ்பிக்கள் தானே பிரபலம் என்பவர்களுக்கு ஐந்து வகை கூலிங் சட்னி ரெஸிபிக்கள் இதோ..
தேங்காய் சட்னி..
அட என்னங்க விதவிதமான ரெஸிபி என்று சொல்லிவிட்டு முதலில் தேங்காய் சட்னி எனக் கூறுகிறீர்களே எனக் கேட்கலாம். ஆமாங்க நாம் காலம் காலமாக அரைக்கு தேங்காய் சட்னி ஊட்டச்சத்து நிரம்பியது மட்டுமல்ல உடல் உஷ்னத்தைத் தவிர்க்கக் கூடியதும் கூட. தேங்காயோடு கொஞ்சம் மல்லி, புதினா என சேர்த்து மாறி மாறி அரைத்தால் உடல் சூட்டை தணிக்கலாம்.
புதினா சட்னி
வெயில் வந்துட்டா பொதுவாவே டீ, காபிக்கு பதிலாக காலையில் மின்ட் வாட்டர் மட்டும் குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் நாம் மின்ட் சட்னி அரைக்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
2 முதல் 3 பச்சை மிளகாய்கள்
1 கப் புதினா இலை
3 கப் மல்லி இலை
1 பச்சை மாங்கய் துருவல்
கால் டீஸ்பூன் உப்பு
தேவைக்கு ஏற்ப உப்பு
ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள்
1 டீஸ்பூன் சீரகம்
8 பல் பூண்டு
ஒரு இன்ச் இஞ்சி
பூண்டு பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடலாம்
இந்த பொருட்களையெல்லாம் ப்ளெண்டரில் சேர்த்து அரைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்துவைத்து ஒரு வாரத்துக்குக் கூட பயன்படுத்தலாம்
வெள்ளரிப்பிஞ்சு சட்னி
வெள்ளரிப்பிஞ்சு அப்படியே சாப்பிட்டிருப்போம். ஏன் உப்பு, மிளகாய் கூட தூவி சாப்பிட்டிருப்போம். அதென்ன வெள்ளரிப் பிஞ்சு சட்னி எனக் கேட்கிறீர்களா? இதோ ரெஸிபி..
தேவையான பொருட்கள்
1 வெள்ளரிப் பிஞ்சு, 2 பச்சை மிளகாய்கள், அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் வெந்தயம், ஒரு சிட்டிகை பெருங்காயம், 2 வெள்ளைப் பூண்உ, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் சன்னா தால், புளி சிறிய கோலி உருண்டை, உப்பு தேவையான அளவு, 2 ஸ்பூன் எண்ணெய், தாளிக்க வர மிளகாய், அழகுபடுத்த மல்லி இலைகள்.
செய்முறை:
வெள்ளரிப் பிஞ்சை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய், உளுந்து, கடலைப் பருப்பை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அது சூடு ஆறியவும் மிக்ஸரில் போட்டு அரைக்கவும், பின்னர் அதில் சீரகம், உப்பு, பூண்டு சேர்க்கவும், அதையும் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்து அரைக்கவும். பின்னர் துருவிய வெள்ளரி மற்றும் புளி கரைசல் கொஞ்சர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தாளிக்க எண்ணெய் ஊற்றி சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிதம் செய்தால் கமகம வெள்ளரிப்பிஞ்சு சட்னி தயார்.
மாங்காய் பச்சடி
இதனை மாங்காய் சட்னி அல்லது மாங்காய் பச்சடி எனச் சொல்வதுண்டு. இதற்கு ஒரு மாங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி அதில் கொஞ்சம் உப்பு மஞ்சள் போட்டு நன்றாக வேகவைத்து அதை இறக்கி மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை மீண்டும் அடுப்பிலேற்றி வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்ற வேண்டும். நீர் அதிகமாகிவிடக்கூடாது. கெட்டியாகக் கரைத்திருக்க வேண்டும். பச்சை வெல்லம் வாசனை போய் நன்றாக திரண்டு வரும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இன்னொரு பேனில் தாளிப்பிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கினால் கமகம் மாங்காய் பச்சடி ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி தொடங்கி சாம்பார் சாதம் வரை எல்லாவற்றிற்குமே இது அல்டிமேட் சைட் டிஷ்ஷாக இருக்கும்.
புளி சட்னி
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக் வேண்டும்.பின்னர் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.தேங்காய் பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான புளி சட்னி தயார்.