மேலும் அறிய

Wheat Breakfast Recipes: கோதுமையில் இத்தனை உணவுகள் செய்யலாமா? பட்டியலை பாருங்க!

Easy Wheat Recipes: கோதுமை ரவையைக் கொண்டு காலையில் விரைவாகவும் எளிமையாகவும் செய்யக்கூடிய சில உணவு வகைகளை இங்கே பார்க்கலாம்.

காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் வீட்டில் காலை உணவை தயார் செய்வது  பெரும்பாடாய் இருக்கும். ஆகவே கோதுமை ரவையைக் கொண்டு காலையில் விரைவாகவும் எளிமையாகவும் செய்யக்கூடிய சில உணவு வகைகளை இங்கே பார்க்கலாம்.

காலை உணவு என்பது சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் முக்கியமானதாகும். இந்த காலை உணவை தவிர்ப்பதால் உடலில் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் ,அன்றைய நாளுக்கான சுறுசுறுப்பே இல்லாமல் போய்விடும் .
ஆகவே இந்த அவசர உலகில் நேரத்தை கொஞ்சமாக மிச்சப்படுத்தி இந்த எளிமையான கோதுமை ரவை உணவுகளை செய்து நாம் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

1. கோதுமை ரவா உப்புமா :

இந்த உன்னதமான தென்னிந்திய உணவான உப்புமா, காலை உணவை மிகவும் எளிமையாக்கி விடும். ருசியானது காலை உணவிற்கு கோதுமை ரவையால் செய்யப்படும் இந்த உப்புமா எல்லோரது விருப்பத்திற்குரிய உணவாகும். சமையலின் போது வரும் உப்புமாவின் தன்மை அல்வாவைப் போலவே இருந்தாலும், உப்புமாவில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் அதனுடன் தொட்டுக்கொள்ள செய்யப்படும் காரமான தேங்காய் சட்னி மிகவும் சுவையானது. உப்புமாவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை நறுமணமும் சுவையும் எல்லோரையும் சாப்பிட வைக்கும்.

உளுத்தம்பருப்பு, ரவை, காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான தென்னிந்திய காலை உணவு தான் இந்த உப்புமா.

தேவையான பொருட்கள்:

4-6 டீஸ்பூன் எண்ணெய்
1/2 டீஸ்பூன் தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு
1/4 தேக்கரண்டி கடுகு 
/4 டீஸ்பூன் சீரகம்
2 வெட்டப்பட்ட வெங்காயம்
4-5 கறிவேப்பிலை
3-4 நறுக்கிய பச்சை மிளகாய்
2 தேக்கரண்டி பூண்டு விழுது
1 தேக்கரண்டி இஞ்சி விழுது
2 டீஸ்பூன் அரைத்த தேங்காய் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகைஉப்பு
250 கிராம் துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள் 
1 நறுக்கிய தக்காளி
150 கிராம் ரவை
250 மில்லி சூடான நீர்
100 மிலி தயிர்
2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
கொஞ்சம் எலுமிச்சை சாறு

செய்முறை:

1.எண்ணெயை சூடாக்கி, உளுத்தம்பருப்பு, கடுகு மற்றும் சீரகத்தை 15 விநாடிகள் வறுக்கவும்.

2.வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து கிளறி 5 நிமிடம் வறுக்கவும்.

3.காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.

4. பின்னர் ரவை சேர்த்து 2-3 நிமிடம் கழித்து தண்ணீர் மற்றும் தயிர் ஊற்றி நன்கு உலரும் வரை 5 நிமிடங்கள் சமைக்கவும்.

5. இறுதியாக எலுமிச்சை சாறு சற்று பிழிந்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்

2. கோதுமை ரவை பிரட் டோஸ்ட்:

சத்தான, நிறைவான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக இந்தக் கோதுமை ரவை பிரட் டோஸ்ட்டை நாம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

1 கப் கோதுமை ரவை
1/2 கப் தயிர்
1/4 கப் தண்ணீர்
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
1/2 கப் நறுக்கிய தக்காளி
1/2 கப் நறுக்கிய கேரட்
1/2 கப் நறுக்கிய கேப்சிகம்
1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்1/2 டீஸ்பூன் மிளகு
சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை:

1. கோதுமை ரவை, தயிர், சிறிது தண்ணீர் மற்றும் உப்பு கலந்து கோதுமை ரவை கலவையை தயார் செய்யவும்.

2.பின்னர் ஒரு கடாயில் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து, மசாலாவுடன் கலந்து சில நிமிடங்கள் வதக்கவும்.

3.பின்னர் மற்றொரு கடாயில்,  கலந்து வைத்திருக்கும் கோதுமை ரவையை கொஞ்சமாக ஊற்றவும், பின்னர் நடுவில் மசாலா கலந்த காய்கறி கலவையை வைக்கவும் அதன்பின்னர் மீதமுள்ள கோதுமை ரவை கலவையை மேலே போட்டு மூடி விடவும்.

4. இறுதியாக நன்கு சமையலானதும் சட்னி அல்லது  சாஸுடன் பரிமாறலாம்.

3. கோதுமை ரவா அப்பம்:

கோதுமை ரவா அப்பம் புதியதாக இருந்தாலும், காலை வேளையில் செய்வதற்கு மிகவும் எளிமையான உணவாகும்.

கோதுமை ரவை மற்றும் அவல் உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளின் சுவையை ருசிக்க விரும்பினால் இந்த அப்பம் சிறந்த உணவாக இருக்கும்.
இது  மிகவும் செய்வதற்கு எளிதாகவும் ஆரோக்கியமான சுவையான உணவாகும்.

 தேவையான பொருட்கள்:

1/2 கப் ரவை
1/2 கப் அவல் 
1/2 கப் தயிர்
மா கரைசலுக்கு  தண்ணீர்
1/2 டீஸ்பூன் சர்க்கரை
1/2 டீஸ்பூன் உப்பு

செய்முறை:

1.முதலில் ரவை மற்றும் அவலை ஒன்றாக கலக்க வேண்டும்.

2.பிறகு அதனுடன் தயிர், தண்ணீர், சர்க்கரை, உப்பு சேர்த்து சுவைக்கேற்ப கலந்து கொள்ளவும்.

3. இவை அனைத்தையும் நன்கு மசியும் வரை கலக்கவும்.

4. பின்னர் அப்பத்திற்கான மாவு தயாராகும் வரை நன்கு கலக்க வேண்டும். 

5.இந்த மாவை ஒரு கடாயில் ஊற்றி லேசாக பொன்னிறமாக  இருக்கும் வரை சமைக்கவும்.

6.உங்களுக்கு பிடித்த கறியுடன் சேர்த்து பரிமாறவும்.

4. கோதுமை ரவா ஸ்பிரிங் ரோல்:

ஆரோக்கியமான  சத்துமிக்க விரைவான காலை உணவாக இந்த ஸ்ப்ரிங் ரோல் இருக்கிறது.
 உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம், குடைமிளகாய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுகிறது. கோதுமை ரவையால் தயாரிக்கப்பட்ட சிறிய ரொட்டியினுள் கிழங்கு கலவையை வைத்து இந்த ஸ்ப்ரிங் ரோல் தயார் செய்யப்படுகிறது.
வாயில் எச்சிலை ஊற வைக்கும் இந்த சுவையான ஸ்ப்ரிங் ரோல் மிகவும் ஆரோக்கியமானதாகும். சற்று காரமான மசாலாக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு கலவை அதன் உள்ளே வைக்கப்படுவது மேலும் சுவையைக் கூட்டுகிறது.

தேவையான பொருட்கள்:

1/2 கப் கோதுமை ரவை
1/2 கப் நறுக்கிய கேரட்
1/2 கப் நறுக்கிய கேப்சிகம்
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
2 நடுத்தர பிசைந்த உருளைக்கிழங்கு
1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
1/4 கப் தயிர்
உப்பு சுவைக்க
1/4 தேக்கரண்டி சாட் மசாலா
1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி கரம் மசாலா
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

1.முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை எடுத்து அதில் பாதி அளவு தயிர் சேர்த்து, மிருதுவான மா கலவையை உருவாக்க சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து
 15-20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

2.பின்னர், ​​வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதனுடன் உப்பு, சாட் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

4.கேரட் மற்றும் குடைமிளகாய் துண்டுகள், காய்கறிகளைச் சேர்த்து, மென்மையாகும் வரை சமைக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.

 5.தட்டையான தவாவில்  தோசை ஊற்றுவது போன்று, கோதுமை ரவை கலவையை வட்ட வடிவமாக ஊற்றி பொன்னிறமாகும் வரை வைக்கவும். அதன் பின்னர் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை அதன் மேல் வைத்து ரோல் செய்யவும் ,பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

5. கோதுமை ரவா கடலை மாவு அடை:

இந்தியாவைப் பொறுத்த அளவில் வீடுகளில் காலை உணவாக அடை வகைகளை செய்வது மிகவும் பிரசித்தமானது. அந்த வகையில் கோதுமை ரவை மற்றும் கடலை மாவு , மிளகாய் உள்ளிட்ட மசாலா பொருட்கள் கலந்த அடை மிகவும் சுவையானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1/2 கப் கோதுமை ரவை
1/2 கப் கடலை மாவு
1/2 கப் தயிர்
1 வெங்காயம், நறுக்கியது
1 தக்காளி, நறுக்கியது
1-2 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி பூண்டு (நசுக்கப்பட்டது)
உப்பு சுவைக்க
சிவப்பு மிளகாய் தூள் 
 கொத்தமல்லி இலைகளை அலங்கரிப்பதற்கு

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மற்றும் கடலை மாவுடன், தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை  கடினமான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் 20 நிமிடங்கள் வரை நன்கு ஊற விடவும்.

 2. அதே பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் தூள். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3.ஒரு தட்டையான கடாயில், சிறிது எண்ணெயை இட்டு சூடாக்கவும். பின்னர் தோசை ஊற்றுவது போன்று,  ஒரு கரண்டி அளவு மாவை ஊற்றி, வட்ட வடிவம் ஆக்கிக் கொள்ளவும். 

4. அடையின் இருபுறமும் நன்கு பொன்னிறமாகும் வரை விட்டு , பின்னர்  எடுத்து பரிமாறவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget