Health: மன அழுத்தம் நீங்க வேண்டுமா..? இந்த 10 உணவுகளே போதும்..!
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பதட்டப்படுவதும் , வருத்தமடைவதும் அல்லது அவ்வபோது மன அழுத்தம் கொள்வதும் இயல்பான ஒன்றுதான்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பதட்டப்படுவதும், வருத்தமடைவதும் அல்லது அவ்வபோது மன அழுத்தம் கொள்வதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த உணர்வுகளில் ஏதேனும் ஒன்று தீவிரமாகும் பொழுதுதான் பிரச்சனையே துவங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் Anxiety And Depression என அழைக்கிறார்கள். Anxiety And Depression ஒரு தனி தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்க முடியாது இது ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது.
மனநலம் அவசியம்:
நம் மனம் நலமாக இருக்கிறதா என்று நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். நாம் எந்த வேலை செய்யும் முன்பும் இதனை கவனித்தல் மிகவும் சிறந்தது. ஏனெனில் நாம் செய்யும் அத்தனை வேலைகளோடும் நேரடி தொடர்பு கொண்டுள்ளது நம் மன நலன் தான். அது சீராக இருக்கிறதா? நாம் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. நாம் பார்க்கப்போகும் இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அதிலிருந்து மீண்டுவர சரியாக மூன்று வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மீள முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை பார்க்க தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை பல அறிகுறிகள் இருக்கின்றன என்றாலே உடனடியாக மருத்துவரை அணுகலாம்.
மோசமான தூக்கம்:
மோசமான தூக்கம் நீங்கள் மனச்சோர்வு அல்லது பதட்டத்தை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கலாம். தூங்குவதில் சிரமம் இருந்தால் திடீரென முழிப்பு வரும், எழுந்ததும் மீண்டும் தூங்க முடியாது - இது ஒரு மனநல கவலையின் சமிக்ஞையாக இருக்கலாம். அடிக்கடி அதிகமாக தூங்குவதும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். அது அதிக சோர்வை குறிக்கிறது.
எப்போதாவது ஒரு மோசமான நாள் வருவது இயல்பானது. மேலும் வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் சோகத்தைத் தருகிறது. ஆனால், நீங்கள் விரும்பிச் செய்த செயல்களில் குறைவான மகிழ்ச்சியையும் நீங்கள் வழக்கமாகக் கண்டால், அது ஏதோ சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
மனச்சோர்வு:
மனச்சோர்வு மற்றும் பதட்டம் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பாதிக்கும். சிலருக்கு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை பசியின்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவர்களுக்கு பசி அல்லது சாப்பிடும் ஆற்றல் இருக்காது.
மனப்பதற்றம் இருந்தால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவ ஆலோசனையோடு சரி செய்யலாம். கூடவே சில ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மூலமும் சரி செய்யலாம்.
மனச் சோர்வை போக்கும் பத்து பெஸ்ட் உணவுகள்
• முந்திரி மனதை ரிலாக்ஸ் ஆக்கும். அதில் உள்ள மக்னீஸியமே அதற்குக் காரணம்
• பெர்ரி வகைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
• ப்ரூஸல்ஸ் ஸ்பருவுட்ஸ் எனப்படும் முளைகட்டிய பயிறு வைட்டமின் சி சத்தை நிறைவாக தன்னகத்தே கொண்டது. அது அட்ரினல் சுரப்பி செயல்பாட்டை சீராக்கி அழுத்தத்தை குறைக்கும்.
• ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸில் ஆன்ட்டி இன்ஃபளமேட்டரி தன்மை உள்ளது. இது அழுத்தத்தை குறைக்கும்.
• மஞ்சளில் உள்ள குருகுமின் கூட மனச் சோர்வைப் போக்கும் தன்மை கொண்டது.
• ஊறுகாய், தயிரில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் கூட மனச்சோர்வை நீக்கும்.
• அவகாடோவில் பி வைட்டமின் கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் மனச்சோர்வுக்கு நல்ல மருந்து.
• டார்க் சாக்கலேட்டுகளில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூட் பூஸ்ட் செய்யும்.
• L-theanine, க்ரீன் டீயில் உள்ள இந்த அமினோ அமிலம் தூக்கத்தை சீராக்கி மனச்சோர்வைப் போக்கும்.
• ஸ்விஸ் சார்டில் மெக்ஜ்னீஸியம் மற்றும் பொட்டாசியம் இருக்கின்றது. இது மனதை அமைதிப்படுத்தும்.