Shawarma: பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Shawarma: ஷவர்மாவிலுள்ள பாக்டீரியாக்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்று கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பஞ்சு மிட்டாய், கபாப் உணவுகள், கோபி மஞ்சூரியன் அடுத்து 'ஷவர்மா'வுக்கும் தடை விதிப்பது குறித்து மாநில உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் உணவு தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் (Food Safety and Standards Authority (FSSA) அதிகாரிகள் ஷவர்மாவில் மனித உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஷவர்மா ஒரு மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. 19ம் நூற்றாண்டு காலத்தில் துருக்கியில் அறிமுகமானது. கோழி, மாட்டுக்கறி, பன்றி, காய்கறிகள் என ஷவர்மாவில் பல வகைகளில் தயாரிக்கப்ப்படுகின்றன. இந்தியாவில் ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஷவர்மா மாதிரிகளில் ஷிகெல்லா(Shigella), சால்மோனெல்லா(salmonella) பாக்டீரியாக்கள் இருந்துள்ளதை கேரள சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசு தெரிவித்திருந்தது. இப்போது கர்நாடக மாநிலத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், FSSA மாநிலத்தில் 10 மாவட்டங்களில் உணவு மாதிரிகளி சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடகாவிலும், பெங்களூரு, மைசூரு, துமகூரு, ஹூப்பள்ளி - தார்வாட், மங்களூரு, பல்லாரி, பெலகாவி உட்பட 17 மாவட்டங்களில் ஷவர்மா மாதிரிகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,வினர் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். சேகரிப்பட்ட 17 மாதிகளில் 8 ஷவர்மா பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்ட்டுள்ளது. பல உணவு சாப்பிடுவதற்கு தரமற்றதாக இருந்தது.
‘ரோடைமைன் -பி’ என்ற வேதிப்பொருள் நிறத்திற்காக சில உணவுகளில் சேர்க்கப்படுவதாக ஏற்கனவே கர்நாடக அரசு அதற்கு தடை விதித்திருந்தது. விற்பனையாளர்கள் குறிப்பிட்ட இந்த கெமிக்கல் பொருளை உணவு தயாரிப்புகளில் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. “ மக்களுக்கு தரம் வாய்ந்த உணவு கிடைப்பதை உற்யுதி செய்வதே எங்களின் ஒரே நோக்கம்.” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘ரோடைமைன் -பி' உடலிலுள்ள செல்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்து விட்டும். திசுக்கள் பாதிப்படைவதற்கும் காரணமாகிவிடும். இதனால் cerebellum, brainstem, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவு தயாரிக்கும்போது பாதுகாப்புடன் செய்யவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
உணவு தயாரிக்கும் போது, சுகாதாரமின்மை, வெகுநாட்களாக உணவை சேமிப்பு மற்றும் வினியோகிக்கும்போது சுகாதாரமற்று இருப்பது ஆகியவை கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
-
ஷவர்மா உணவு தயாரிக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
-
ஒவ்வொரு நாளும் புதிதாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
- FSSA சான்றிதழ் பெற்ற கடைகளில் மட்டும் ஷவர்மா சாப்பிட வேண்டும்.
இவ்வாறு உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணைய அதிகாரிகள் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறித்தி உள்ளனர்.
பானி பூரி தரமற்றது என்று வெளியாகியுள்ள தகவல் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, உடல்நலனை கவனத்தில் கொண்டு பானி பூரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்போது ஷவர்மாவிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்தால் ஷவர்மாவிற்கு தடை விதிக்கும் முடிவெடுக்கும் வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.